districts

img

சேலம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்—மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

மதுக்கடை எண்ணிக்கையை குறைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில், பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரே பகுதியில் ஐந்து மதுக்கடை உள்ளது. இதனால் பொதுமக்கள், போக்குவரத்திற்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதால் மதுக்கடை எண்ணிக்கையை குறைத்திட வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின்போது ஜீன்-30க்குள் மதுக்கடையை குறைப்பதாக டாஸ்மாக் தாசில்தார், மேற்கு துணை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் வந்து உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதில் மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் மாநகரக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், செல்லபாண்டியன், முருகானந்தம்,  சங்கர், ஜீவா உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.