பட்டா கேட்டு ஜூன் மாதம் காத்திருப்புப் போராட்டம்
விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்
சேலம், மே 17- பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி, ஜூன் முதல் வாரத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற வுள்ளதென, விவசாயிகள் சங்கம் அறி வித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் கடந்த 1951 ஆம் ஆண்டு ஆதிதிராவி டர் நலத்துறை நில குடியேற்ற சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன்மூலம் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். 1988 ஆம் ஆண்டு அந்த சங்கம் கலைக்கப்பட்டு, அங்கி ருந்த நிலங்களை தரிசு நிலம் வகையில் சேர்க்கப்பட்டு, சுமார் 95 பேருக்கு கண்டி ஷன் நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பட்டா இதுவரை கணினி யில் ஏற்றப்படாததால், அதற்கான சலு கைகள் விவசாயிகளுக்கு மறுக்கப் பட்டு வந்தது. விவசாய சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஆத் தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுவரை அந்த மக்களுக்கு முறையான பட்டா வழங்கப்படவில்லை. இதனைக் கண் டித்தும், பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாயக் கன்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் கிளைத் தலைவர் பி.மாணிக்கம் தலைமை வகித் தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் சாமி.நடராஜன், மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வெங்கடாசலம், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, வட்டத் தலைவர் இல.கலைமணி, கவி ஞர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், பட்டா கேட்டு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்து வது எனவும், இதில் திரளான மக்களை பங்கேற்க வைக்க வேண்டும், எனவும் முடிவு செய்யப்பட்டது.