tamilnadu

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அந்தியூர் சந்தை வியாபாரிகள் அமோக ஆதரவு

 திருப்பூர், ஏப். 1 - திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கு அந்தியூர் சந்தையில் வியாபாரிகள், பொது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை காலை அந்தியூர் திங்கள் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் துண்டறிக்கை கொடுத்து ஆதரவு திரட்டினர்.அப்போது “மோடி, முதலில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்தமுறை நீங்கள் தான் வருவீர்கள்” என்று வியாபாரிகள் பலர் கூறியதுடன் ஆர்வத்துடன் துண்டறிக்கைகளை வாங்கிக் கொண்டனர். ஒரு அம்மா “இது அதிமுக மோடி கூட்டணி நோட்டீசுன்னா, அந்த நோட்டீசை நான் வாங்கவே மாட்டேன்” என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார். கதிர் அரிவாள் சின்னத்தில் கட்டாயம் வாக்களிப்போம் என்று ஏராளமானோர் உற்சாகமாக உறுதியளித்தனர்.