சென்னை,ஜூன் 24- சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா ஆகிய ஐந்து செம்மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கிய ஒன்றிய பாஜக அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுககுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என விமர்சித்து பதிவிட்டுள்ளார்