போபால்:
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியாரும், பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்கூரை, மத்தியப்பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ளது மஹன்லால் சதுர்வேதிபல்கலைக்கழகம். இங்கு குறைவானவருகைப் பதிவு கொண்டிருந்ததாக கூறி, மாணவர்கள் சிலரை, பல்கலைக் கழக நிர்வாகம், தேர்வு எழுதஅனுமதிக்கவில்லை. இதைக் கண் டித்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல் போனதாலேயே மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றும் கூறுகின்றனர். மாணவிகளும், தங்கள் துறைக்குப் பொறுப்பான பேராசிரியர்தான் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.இந்நிலையில் மாணவர்களை சமாதானப்படுத்துகிறேன் என்று கூறி,போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்குர், புதனன்று அந்த பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அப்போதுதான் அங்கிருந்த மாணவர்கள் எம்.பி. பிரக்யாவை முற்றுகையிட்டு, ‘கோட்சேவை தேசபக்தர் என்ற தேசத் துரோகியே திரும்பிப் போ’என்றும் ‘மாலேகான் குண்டுவெடிப் பில் தொடர்புடைய தீவிரவாதியே திரும்பிப் போ’ என்றும் முழக்கம் எழுப்பியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பிரக்யா சிங் தாக்குர், எதுவுமே பேசமுடியாமல் அங்கிருந்து உடனடியாகஇடத்தைக் காலி செய்து, அங்கிருந்து ஓடி வந்துள்ளார்.பிரக்யா சிங் தாக்குர், சில நாட்களுக்கு முன்புதான், ‘ஸ்பைஸ் ஜெட்’விமானப் பயணிகளிடம் வம்பிழுத்துவசமாக மாட்டினார். தற்போது, மாணவர்களிடமும் சிக்கி அவமானப்பட் டுள்ளார்.இதனிடையே ஒரு பெண் சந்நியாசியான தன்னை விரட்டியடித்த மாணவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும், அவர்களைச் சும்மா விட மாட்டேன் என்றும் பிரக்யாசிங் தாக்கூர் செய்தியாளர்கள் மத்தியில் ஓலமிட்டுள்ளார்.