அரியலூர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் ஆய்வு
அரியலூர், ஜூலை 7- அரியலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், பொறியாளர் காசிநாதன், திருச்சி கோட்ட பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் தமயந்தி, நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.