காலநிலை மாற்றம், பாலின சமத்துவம் சென்னையில் மாணவர்கள் விவாதம்
சென்னை, ஜுலை 29- இன்றைய இளைஞர் களை நாளைய உலகின் தலைவர்களாக உரு வாக்கும் நோக்குடன், காசாகிராண்ட் இன்டர் நேஷனல் பள்ளி 14வது ஐ.நா. சங்கத்திற்கான இந்திய சர்வதேச இயக்கம் (ஐஐஎம்யூஎன்) தமிழ்நாடு மாநாட்டை சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 70-க்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கும் மேற்பட்ட பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உல கில் உடனடியாக கவ னிக்கப்பட வேண்டிய கால நிலைமாற்றம், பல்வேறு மோதல்களுக்கு தீர்வு, பாலின சமத்துவம், தேசிய அளவில் கல்வி தளத்தில் சீர்திருத்தங்கள் போன்ற முக்கிய தலைப்புகள் மீது மாணவர்கள் கருத்து பரிமாற்றமும், விவாதமும் நடத்தவுள்ளனர் என்று பள்ளியின் தாளாளர் டாரத்தி தாமஸ் கூறினார். விவாதங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.