குடிநீர், சாலை வசதி கேட்டு சிதம்பரம் அருகே பொதுமக்கள் மறியல்
சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் அருகே சி.மானம்பாடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி உட்பட்ட சி.மானம்பாடி பகுதி யில் கிராம மக்கள்குடி நீர், சாலை வசதி இல்லா மல் ஒரு வருட கால மாக அவதிப் பட்டு வந்துள்ளனர். இத னால் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூ ராட்சி தலைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டி த்து சி.மானம்பாடி கிராம மக்கள் காலி குடங்களு டன் கிள்ளை-பரங்கிப் பேட்டை மெயின் ரோட்டில் சி.மானம்பாடி கிராம சாலை யில் கையில் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் தாசில்தார் கீதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த னர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தேவை யான அடிப்படை வசதி களை மாவட்ட நிர்வா கத்திற்கு தெரியப்படுத்தி செய்து தருவதாக உறுதி யளித்தனர். இதனை ஏற்று மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.