games

img

விளையாட்டு

இரண்டு அணிகளுக்கும் ஆதரவு நெகிழ வைத்த திண்டுக்கல் மண்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொட ரின் 9ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திருப்பூர் அணி 118 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்று, டிஎன்பிஎல் வரலாற்றில் முதன்முறை யாக சாம்பியன் பட்டம் வென்றது.  இந்நிலையில், இந்த ஆட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இறுதி ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே என்பிஆர் மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும் விளையாடியதால் அந்த அணிக்கு அமோக ஆதரவு, வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் இரு அணிகளுக்கும் சரிசம ஆதரவை வழங்கினார்கள். என்பிஆர் மைதானத்தில் திண்டுக்கல் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், இரண்டு அணிகளுக்கும் ஆதரவு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல உள்ளூர் அணியான திண்டுக்கல் கோப்பையை இழந்தாலும், “தமிழ்நாடு அணிப்பா” என்று அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 இறுதிக்கு முன்னேறுமா பிரேசிலின் ப்ளுமினென்ஸ்?

 

ப்ளுமினென்ஸ் (பிரேசில்) - செல்சி (இங்கிலாந்து) நேரம் : நள்ளிரவு 1:30 மணி (செவ்வாய்க்கிழமை)

இடம் : மெட்லைப் மைதானம், நியூயார்க் (அமெரிக்கா)

சேனல்: டாஸ்ன் நெட்வொர்க் (இந்தியாவில் ஒடிடி-யில் மட்டுமே தெரியும்)

சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதி ஆட்டங்களின் முடிவில் ப்ளுமினென்ஸ் (பிரேசில்), செல்சி (இங்கிலாந்து), பிஎஸ்ஜி (பிரா ன்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய  4 அணிகள் அரையிறுதிக்குமுன்னேறின. இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு நடைபெறவுள்ள முதல் அரையிறுதி  ஆட்டத்தில் ப்ளுமினென்ஸ் (பிரேசில்) - செல்சி (இங்கிலாந்து) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின் றன. 2021ஆம் ஆண்டு கிளப் உலகக் கோப்பையை வென்ற செல்சி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போல கடந்த சீசனில் இறுதி வரை முன்னேறி கோப்பையை பறி கொடுத்தது போல மீண்டும் நிகழக் கூடாது என்ற முனைப்பில் கவனமாக விளையாடி வரும் ப்ளுமினென்ஸ் அணி, தீவிர பயிற்சியுடன் அரை யிறுதியில் களமிறங்குகிறது. எனவே இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குவ தால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடை பெறுகிறது. ப்ளுமினென்ஸ் அணி கடந்த சீசனில் (2023) மான்செஸ்டர் சிட்டி அணியிடம் (இங்கிலாந்து) தோல்வியை தழுவி, சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்து 2ஆம் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் அரையிறுதி

நடப்பாண்டு கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 4 அணிகள் (ப்ளுமினென்ஸ் (பிரேசில்), செல்சி (இங்கிலாந்து), பிஎஸ்ஜி (பிரான்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் ப்ளுமினென்ஸ் மட்டுமே தென் அமெரிக்க கண்ட அணியாகும். மற்ற 3 அணிகளும் ஐரோப்பா கண்ட அணிகள் என்ற நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு தென் அமெரிக்க கண்ட அணியான ப்ளுமினென்ஸ் சாம்பியன் பட்டம் வென்று ஐரோப்பா கண்டத்தின் ஆதிக்கத்தை முறியடிக்குமா?  என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதனால் ப்ளுமினென்ஸ் (பிரேசில்) - செல்சி (இங்கிலாந்து) அணிகள் மோதும் முதல் அரையிறுதி ஆட்டத்தை கால்பந்து உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிளப் உலகக்கோப்பை தொடரில் பிரேசில் கிளப் அணியான கொரிந்தியன்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு தென் அமெரிக்க கண்ட கிளப் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.