மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் 19 வயதான திவ்யா தேஷ்முக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
மகளிர் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி ஜார்ஜியாவில் இன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு இந்திய வீராங்கனைகளில் கோனேரு ஹம்பியை(32) வீழ்த்தி திவ்யா தேஷ்முக்(19) கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் FIDE செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார் திவ்யா.
மேலும் மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் வரலாற்றில் இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்.