tamilnadu

img

மதுரையில் கே.பி.ஜானகியம்மாள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

கே.பி.ஜானகியம்மாள் நினைவு தினம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான கே.பி.ஜானகியம்மாள் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் கடைபிடிக்கப்பட்டது.மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவில் அமைந்துள்ள மாதர் சங்க மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஆர்.லதா தலைமை தாங் கினார். மத்தியக் குழு உறுப் பினர் ஆர்.சசிகலா, மாவட் டச் செயலாளர் வை.ஜென்னியம்மாள் (எம்.சி.), மாநிலக் குழு உறுப்பினர் பி.சாந்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் செல்லம்மாள் உள்ளிட்டோர் ஜானகி யம்மாள் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.