பனியில் மலர்ந்த ரோஜா! - ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுப் பயணம்
காஷ்மீர் என்ற சொல் காதில் விழுந்தால், முதலில் நினைவுக்கு வருவது ரோஜா. அங்கு, பள்ளத்தாக்குகளில் மலர்ந்த மற்றொரு ரோஜா இன்று கிரிக்கெட் மைதானங்களில் நறுமணம் வீசுகிறது. அதுதான் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி. 1959-60 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை இதழ்களில் முதல் இதழை மெல்லத் திறந்த இந்த மலர், 67 ஆண்டு கள் பொறுமையாகக் காத்திருந்து, 2025-26 சீசனில் முழுமையாக மலர்ந்து, வரலாற்றில் தன் மணத்தைப் பரப்பியது. இந்துக்களும் - இஸ்லாமியர்களும் மதத்தால் வேறுபட்டாலும் மனத்தால் ஒன்றிணைந்திருக்கும் இந்தச் சொர்க்கப் பூமி, இந்தியாவின் மதச்சார் பின்மைக்கு உயிரோட்டமான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் ஒரு தோளுக்கு, ஒரு தோள் நின்று பயிற்சி பெறும் வீரர்கள், சுற்றுலா பயணி களுக்கு திரையரங்காக திகழும் பள்ளத் தாக்குகளில் இவையே காஷ்மீர் கிரிக் கெட்டின் உண்மையான வேர்கள். ஒற்றுமையின் கோட்டை 370ஆவது சட்டப்பிரிவு ரத்தால் மாநிலம் பிளந்தது. அரசியல் சட்டம் அகற்றப்பட்டது. ஆட்சி அமைப்பு மாறியது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வாரியம் (JKCA) இந்த அரசியல் சூறாவளியிலும் ஒரு தனி தீவாக நின்றது. இரு பகுதிகளி லிருந்தும் ஒரே கொடியின் கீழ் விளை யாடும் இந்த அணி, ஆட்சிகள் பிரித்தா லும் மக்கள் ஒன்றே என்ற செய்தியை மைதானத்தில் நிரூபித்தது. ஜம்மு மாவட்டத்தின் பரஸ் டோக்ரா கேப்டன். பள்ளத்தாக்கின் ஆகிப் நபி பந்து வீசுகிறார். அப்துல் சமத் மட்டையை சுழட்டுகிறார். சுபம் கஜூரியா அவருக்கு தோள் கொடுக் கிறார். இந்து-முஸ்லீம் வேறுபாடி ன்றி, ஒரே அணி, ஒரே கனவு, ஒரே கோப்பை. இது வெறும் கிரிக்கெட் வெற்றியல்ல; இது ஒற்றுமையின் வெற்றி. 2021க்குப் பிறகு, அரசியல் மாற்றங்கள் கிரிக்கெட் கட்டமைப் பிலும் ஊடுருவியது. பிசிசிஐயால் பாதித்தாலும், மைதானத்தில் ஒரு இந்து வீரனும் ஒரு முஸ்லீம் வீரனும் ஒரே அணிக்காக வியர்வை சிந்துவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஒரு மனித ஒற்றுமையின் சின்னமாக நிலைத்து நிற்கிறது. முதல் மொட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு கனவு வளர்ந்தது. அதுதான் பர்வேஸ் ரசூல். 2012-13 ரஞ்சி சீசனில் 594 ரன்களும் 33 விக்கெட்களும் வீழ்த்தி,புதிய அவதாரமாக உருவெடுத்தார். 2014, வங்கதேசத்திற்கு எதிராக பர்வேஸ் ரசூல் களம் கண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்திய அணிக்குத் தேர்வான முதல் வீரர் என்ற பெருமை அவருக்குகிடைத்தது. இர்பானின் வரவு 2018-19 ஆண்டில்,இர்பான் பதான் ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இணைந்தார். அவரிடம் இளம் வீரர்கள் கற்றது வேகம் மட்டுமில்லை. 40 முறை ரஞ்சி கோப்பையை தன் கரங்களில் ஏந்திய மும்பை அணி, இந்திய கிரிக்கெட்டின் கோட்டை. அந்த கோட்டையில் நுழைவதே அரிது. ஆனால் 2014-15 ரஞ்சி சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி, மும்பையின் சொந்த மண்ணில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோஜாவின் இதழ்கள் 2025-26 ரஞ்சி சீசனில் 60 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்ற வேகப்பந்து வேங்கை ஆகிப் நபி, ஐபிஎல் ஏலத்தில் தில்லி அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரின் மிக விலை உயர்ந்த வீரர் என்ற பெருமை யை பெற்றார். 150 கிலோ மீட்டர் வேகத்தில் உலகையே வியக்க வைத்தது காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக். இந்த இளைஞன் ஸ்ரீநகரின் சந்துகளில் வளர்ந்தவர். ஐபிஎல் தொட ரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார். அதிரடி வீரன் அப்துல் சமத், லக்னோ அணியால் தக்க வைக்கப்பட்டுள்ள காஷ்மீரின் முகம். வஞ்சஜ் சர்மா, 22 வயதில் அதிசயம்: இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இவர், 22 வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எதிர்காலம். யுத்வீர் சிங், வேகப்பந்து வீச்சாளரான இவர் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். விவ்ராந்த் சர்மா, ஆபித் முஷ்டாக், கம்ரான் இக்பால் போன்ற இளம் திறமைகளும் 2026 ஐபிஎல் ஏலப்பட்டி யலில் காஷ்மீரின் கொடியை ஏந்தியுள்ளனர். வரலாற்றின் உச்சம் அதாவது, இரண்டு தலைமுறை களின் கனவுகள். எண்ணற்ற தோல்வி களின் கண்ணீர். விடா முயற்சி. முதல் முறையாக ரஞ்சி கோப்பையை தன் கரங்களில் ஏந்தியது. அரசியல் புயல்கள் வந்தாலும் போனாலும், கோப்பை மட்டும் மாறாமல் நிற்கும் என்பதை ஜம்மு-காஷ்மீர் அணி நிரூபித்தது. 2019இல் ஒரு அரசியல் முடிவு ஒரு மண்ணை இரண்டாகப் பிளந்தது; ஆனால் 2025-26-இல் ஒரு கிரிக்கெட் வெற்றி அந்த மண்ணை மீண்டும் ஒன்றிணைத்தது கோப்பையில். மண்ணின் கனவு காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஒரு அமைதியான நாயகி இருக்கிறாள். “காஷ்மீர் வில்லோ”. இந்த மரத்தில் செய்யப்படும் கிரிக்கெட் மட்டைகள், சர்வதேச அரங்கில் தோல்களைத் தட்டும் மட்டைகளாக மாறியுள்ளன. காஷ்மீர் தரும் மட்டையிலேயே அந்த மண்ணின் கனவுகளும் மோதுகின்றன என்பது ஒரு அழகான கவிதை. பனி உருகும். வசந்தம் வரும். ரோஜா மலரும். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் கதை இது மட்டு மல்ல. இது ஒரு தொடர்கதை. இந்தியா வின் மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த சான்று. காஷ்மீர் ரோஜா என்றும் மலர்க! -சி.ஸ்ரீராமுலு
