67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது ஜம்மு-காஷ்மீர்
நாட்டின் முதன்மையான உள்ளூர் முதல்தர போட்டி யான ரஞ்சி கோப்பை (டெஸ்ட்) தொடரின் 91ஆவது சீசன் 2025ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் 8 முறை சாம்பி யனான கர்நாடகா, முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஜம்மு-காஷ்மீர் அணிகள் பலப் பரீட்சை. நாட்டில் பல்வேறு வலுவான அணிகள் இருக்கும் போது, ஜம்மு-காஷ்மீர் அணி எப்படி இறுதிக்கு முன்னேறியது? என்ற ஆவலுடன், பிப்., 24 அன்று தொடங்கிய இறுதிப் போட்டியை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த னர். பேட்டிங்கில் கலக்கல் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி பேட்டிங் செய்து முதலில் களமிறங்கி யது. சுபம் புந்தீரின் (121 ரன்கள்) அபார சதத்தால், ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 173.1 ஓவர்களில் 584 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கர்நாடக வீரர் பிரசீத் கிருஷ்ணா அதிகப்பட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கர்நா டகா அணி தனது முதல் இன்னிங்ஸில், ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபியின் (5 விக்கெட்டுகள்) மிரட்டலான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 93.3 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 291 ரன்கள் முன்னிலையுடன் இரண்டா வது இன்னிங்ஸை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி சனியன்று நடைபெற்ற 5ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இக்பால் (160 ரன்கள்), சஹீல் (101 ரன்கள்) ஆகியோரின் அபார அதிரடி சதங்களால், 113 ஓவர்க ளில் 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது. ஆட்டம் டிராவில் நிறைவ டைந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி 2025-2026ஆம் ஆண்டின் ரஞ்சி கோப்பை சாம்பி யனாக அறிவிக்கப்பட்டது. புதிய வரலாறு இதன்மூலம் 67 ஆண்டுகால வரலாற்றில் (ஜம்மு-காஷ்மீர் -விளை யாட தொடங்கிய நாள் முதல்) முதன்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது ஜம்மு-காஷ்மீர் அணி. இந்த சீசனில் 10 போட்டிகளில் 60 விக்கெட்டுகளை (சராசரி 12.56) வீழ்த்திய ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் குவித்த சுபம் பந்தீர் ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றார். பாராட்டு 1959-60 சீசனிலிருந்து ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு நாடு முழு வதும் பாராட்டுக்கள் குவிந்து வரு கிறது. குறிப்பாக இறுதிப்போட்டியின் கடைசி நாளன்று ஹுப்ளி மைதா னத்திற்கு வருகை தந்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அம்மாநில அணி வீரர்களை உற்சாகப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் இருந்தும் கர்நாடகாவை புரட்டியெடுத்த ஜம்மு-காஷ்மீர்
இறுதிப்போட்டியில் விளை யாடிய கர்நாடக அணியில் கே.எல்.ராகுல் (இந்திய அணி மற்றும் ஐபிஎல் கேப்டன்), மயாங்க் அகர்வால் (ஐபிஎல் கேப்டன்), கருண் நாயர் (சர்வதேச போட்டியில் முச்சதம் அடித்தவர்), ஸ்ரேயாஸ் கோபால் (ஐபிஎல் நட்சத்திர வீரர்), தேவ்தத் படிக்கல் (ஐபிஎல் நட்சத்திர வீரர் மற்றும் கர்நாடக அணியின் கேப்டன்), பிரசித் கிருஷ்ணா (இந்திய அணியின் பந்து வீச்சாளர்) முக்கிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். எனினும் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் கள மிறங்கி கர்நாடக அணியை ஜம்மு-காஷ்மீர் அணி புரட்டியெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
