tamilnadu

img

வாலிபர் சங்க தரங்கம்பாடி ஒன்றிய மாநாடு

வாலிபர் சங்க தரங்கம்பாடி ஒன்றிய மாநாடு

மயிலாடுதுறை ஜூலை 7-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தலில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய 24 ஆவது மாநாடு சனிக்கிழமை ஒன்றியத் தலைவர் கார்த்திகேசன் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்கிடுக!. காலநிலை மாற்றத்தின் பாதிப்பிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாத்திடுக! என்ற முழக்கத்தோடு சங்கரன்பந்தல் கடைவீதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற பேரணியை, சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ. ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். மாநாட்டு கொடியினை ஒன்றிய துணைச் செயலாளர் பி.எஸ். கோஷ்மின் ஏற்றி வைத்தார். ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் எம்.ஐயப்பன் உரையாற்றினார். வேலையறிக்கையை ஒன்றியச் செயலாளர் பவுல்சத்தியராஜ் வாசித்தார். மாவட்டச் செயலாளர் ஏ. அறிவழகன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின்  ஒன்றிய தலைவராக பவுல் சத்தியராஜ், ஒன்றியச் செயலாளராக ரஷ்யா என்கிற கார்த்திகேசன், பொருளாளராக ராமச்சந்திரன், துணைச் செயலாளராக ரித்தீஷ், துணைத் தலைவராக தீபிகா உள்ளிட்ட 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.