tamilnadu

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து பிரச்சார இயக்கம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து பிரச்சார இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை, 7-  ஒன்றிய அரசின் மக்கள், தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜுலை 9 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.  இந்த வேலை நிறுத்தம் மற்றும் மறியல் குறித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணச்சநல்லூர், ராசாபாளையம், பூனாம்பாளையம், திருவெள்ளறை, வளையூர், கீழப்பட்டி, வீராணி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆட்டோ மற்றும் இருச்சக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மண்ணச்சநல்லூர் கடைவீதியில்  சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் நிறைவுரையாற்றினார்.  இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் செல்வம், சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலாளர் என்.சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.