நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை(ஏப்.16) மாலையுடன் ஓயும் நிலையில், வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் கை சின் னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்குசேகரித்தனர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளராக போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று பெரம் பலூரில் பிரச்சாரம் நடைபெற்றது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாய் கிழமை திருச்சிமண்ணச்சநல்லூர் சட்டமன்றதொகுதி மண்ணச்சநல்லூர்கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்