tamilnadu

img

ஜூலை 9 பொது வேலைநிறுத்தம்

ஜூலை 9 பொது வேலைநிறுத்தம்

தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும். தரைக்கடை வியாபாரிகள் உள்பட  40 கோடி முறைசாரா தொழிலாளர் களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும். நூறு நாள்  வேலை திட்டத்தை 200 நாளாக்கி,  கூலி உயர்வு வழங்கி நகர்ப்புறத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் ஜூலை 9 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம், மறி யல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த மறியல் போராட்டத்தை விளக்கி சிஐடியு தரைக்கடை தள்ளு வண்டி வியாபாரிகள் சங்கம் சார்பாக திருவெறும்பூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு பசுபதி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன். தரைக்கடை சங்க மாவட்டச் செய லாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன், கட்டுமான சங்க தலைவர்  சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை  விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.