வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
அரியலூர், ஜூலை 4 - ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளில் நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் (வ.ஊ), அன்புச்செல்வன்(கி.ஊ), பொறியாளர்கள் இராஜா சிதம்பரம், சித்ரா, ஊராட்சி மன்ற செயலா ளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ஆர். கலியபெருமாள் (ஆண்டி மடம் தெற்கு), செந்தில் குமார் (ஆண்டிமடம் மேற்கு), மாவட்ட விவ சாய அணி அமைப்பாளர் தருமதுரை மற்றும் அரசு அலுவலர்கள், ஆண்டி மடம் கிழக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒப்பந்த தாரர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை அருகே
நெல் கொள்முதல் நிலைய கட்டடம் திறப்பு
தஞ்சாவூர், ஜூலை 4- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் கழுகுப்புலிக் காடு ஊராட்சி, பில்லங் குழி கிராமத்தில், வேளாண்மை விற்பனை கூடத்தின் மூலம் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட பல் நோக்கு உலர் களம், தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் புதிய கட்டிடத்தை திறந்து வைத் தார். நிகழ்ச்சியில், முன் னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்தி ரன், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலை வர் வீர.சரவணன், கிளைக் கழக செயலா ளர், ஊராட்சி கழகச் செயலாளர், கட்சியினர், பொதுமக்கள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை இயந்திரங்கள் இயக்குதல், பராமரிப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர், ஜூலை 4 - பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பலவகை வேளாண்மை கருவிகள் மற்றும் இயந்தி ரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், அவற்றை பயன்படுத்தும் முறை, தொழில்நுட்பங்கள் மற்றும் பழுது சீரமைப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் 9.7.2025 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கம் எதி ரில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் முகா மினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இயந்தி ரங்களை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி யில் பங்கேற்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களது டிராக்டர், பவர்டில்லர், பவர்வீடர், ரோட்டவேட்டர் ஆகிய கருவிகளை முறையாக இயக்குவதற்கும், பழுது நீக்கம் குறித்த பயிற்சி அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமில் தனியார் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவி கள் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளும், வேளாண்மை பொறியியல் துறை பொறியா ளர்களும் கலந்து கொண்டு செயல்முறை பயிற்சி வழங்கவுள்ளதால், விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொது வேலைநிறுத்தத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பங்கேற்கிறது
மயிலாடுதுறை, ஜூலை 4 - பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக மயிலாடுதுறையில் நடைபெற்றது. பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய வேலை நிறுத்தம், பணி மேம்பாட்டுப் பிரச்சனைகள், எம்.பில்., பி.எச்.டி., தர ஊதியம், கிளைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2025-2027 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஏ.யு.டி பொதுச் செயலாளர் சேவியர் செல்வகுமார், பொருளாளர் சார்லஸ், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கான பணி மேம்பாட்டுப் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வரை போராடுவது என தீர்மானிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுக்கான பணப் பலன்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப் பெறுவது, பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது, சம வேலைக்கு சம ஊதியம், எட்டுமணி நேர வேலையை உறுதிப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களுக்கு ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில், ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் ஏ.யு.டி யின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.