tamilnadu

img

எல்ஐசி ஊழியர்கள் தெருமுனைப் பிரச்சாரம்

எல்ஐசி ஊழியர்கள் தெருமுனைப் பிரச்சாரம்

மன்னார்குடி, ஜூலை 4 - ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தத்தை யொட்டி, கோரிக்கைகளை விளக்கி திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் எல்ஐசி ஊழி யர்கள் தெருமுனை பிரச்சாரம் செய்தனர். கிளைத் தலைவர் கே.வீ.பாஸ்கரன் தலை மையில் பந்தலடி மற்றும் பெரியார் சிலை அரு கில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் வங்கி இன்சூ ரன்ஸ் துறை பெண் முகவர்கள், பெண் ஊழி யர்கள் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர் சம்மேளனம் ராஜகுமார்,  எல்ஐசி லியாபி, முகவர் சங்கம் மஹாலிங்கம், எல்ஐசி முகவர் சங்கம் லிகாய் ராஜேந்திரன், சிஐ டியு தலைவர்கள் தங்க ஜெகதீசன், சிஐடியு ரகுபதி, சிபிஎம் தாயுமானவன், அறிவியல் இயக்கம் பொன்முடி, பிஎஸ்என்எல் பிச்சைக் கண்ணு, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் அகோரம், கோவிந்த ராஜ், எல்ஐசி ஊழியர் சங்க கோட்டத் தலைவர் செல்வராஜ், கோட்ட இணைச் செயலர் விஜய குமார், கோட்டப் பொதுச் செயலாளர் சேதுரா மன் ஆகியோர் பேசினர். செயலாளர் அப்துல்ரெ ஸாக் நன்றி தெரிவித்தார்.