திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 10 ஆண்டுகளாக 120 பேர் துப்புரவு தொழி லாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் அனைவரையும் வேலைநீக்கம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக தொழிலாளர் நலத் துறையில் நடைபெறும் வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையும், ஒப்பந்த நிறுவன மும் தொடர்ந்து ஆஜராகாமல் காலம் தாழ்த்துகின்றனர். இதைக் கண்டித்தும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக் கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த சம்பளத்தை வழங்காமல் சம்பளத்தை குறைத்து கொடுத்து ஒவ்வொரு தொழிலாளர்களிடம் சுரண்டிய ரூ.6 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க பகுதி செயலாளர் சந்துரு, சிஐடியு ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, தரைக்கடை சங்க கோவிந்தன், சாலைப் போக்குவரத்து சங்க பகுதி செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.