articles

img

இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகளை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும்

இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகளை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும்

இனப்படுகொலைக்கு உதவும் கொடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்: பெயர் பட்டியலை வெளியிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

நியூயார்க், ஜூலை 4 - பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வழிகளில் உதவி வரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலையும் அதுசார்ந்த விரிவான அறிக்கையையும் ஐ.நா. அவையின் சிறப்பு அறிக்கையாளர் ஃபிரான்செஸ்கா அல்பனீஸ் வெளியிட்டுள் ளார். மேலும் இஸ்ரேல் உடனான பொருளா தார உறவுகளை சர்வதேச அளவில் அனை வரும் துண்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த அறிக்கையில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஆல்பாபெட் இன்க். (கூகிளின் தாய் நிறுவனம்) அமேசான் உட்பட ‘48 கார்ப்பரேட் நிறுவனங் களின் பெயர்கள்’ குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ‘1,000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் தரவுத்தளமும்’ தொகுக்கப்பட்டுள்ளது. காசா: கார்ப்பரேட்டுகளின் சோதனைக் கூடம்  இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் கார ணமாக காசா ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு ஒரு சிறந்த சோதனைக் கூடமாக மாறியுள்ளது. இதன் மூலம் அந்த நிறு வனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களின் வெற்றி யை காட்டி அதன் விற்பனையை அதிகரித்து தடையின்றி லாபம் ஈட்டுகின்றன என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.  அவ்வறிக்கையின்படி, இனிமேலும் நிறுவனங்கள் வெறும் ஆக்கிரமிப்பில் பங்கு  வகிக்கின்றன என மட்டும் கூற முடியாது. அவை இனப்படுகொலை பொருளாதாரத்தில் முழுமையாக மூழ்கியிருக்கலாம் என காசா  மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்கு தலைக் குறிப்பிட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆயுத நிறுவனங்களின் பங்கு  இஸ்ரேல் இனப்படுகொலை தாக்குத லுக்குப் பயன்படுத்தும் ‘எஃப்-35 போர் விமானங்கள்’ உலகின் மிகப்பெரிய ஆயுதக்  கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த விமான உற்பத்தி எட்டு நாடுகளைச் சேர்ந்த குறைந்தது ‘1,600 நிறுவனங்களை நம்பியுள்ளது.’ இதற்கு அமெரிக்காவை தள மாகக் கொண்ட லாக்ஹீட் மார்ட்டின் தலைமை தாங்குகிறது. இந்த விமானத்திற்கான பாகங்கள் உலகளாவிய அளவில் தயாரிக்கப்படுகின்றன.  குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள்  •    இத்தாலி: லியோனார்டோ எஸ்.பி.ஏ (Leonardo S.p.A)  •    

ஜப்பான்: ஃபனுக் கார்ப்பரேஷன் (FANUC  Corporation) - ஆயுத உற்பத்தி நிறுவனங் களில் முக்கியமான உற்பத்தி சாதனமாகப் பயன்படுத்தப்படும் ரோபோ இயந்திரங்களை வழங்குகிறது.  தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவு மற்றும் கண்காணிப்பு உதவி  ஆயுத நிறுவனங்களின் பொருளாதாரம் பின்னிப்பிணைந்திருக்கும் நேரத்தில், தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் ‘பால ஸ்தீனர்களின் பயோமெட்ரிக் தரவுகளை’ இஸ்ரேலின் தேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த சேமிக்க உதவியுள்ளன.  முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் - மைக்ரோசாஃப்ட், ஆல்பாபெட், அமேசான், ஐபிஎம் - கிளவுட் மற்றும் செயற்கை நுண்ண றிவுத் தொழில்நுட்பங்களை இஸ்ரேலுக்குக் கொடுத்து அதன் ராணுவத்தின் தரவு செய லாக்கம் மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தி வருகின்றன.   இதன் மூலம் ட்ரோன்கள், ஆளில்லா விமா னங்களைப் பயன்படுத்தி காசா பகுதிக்குள் பாலஸ்தீனர்களின் வீடுகள், முகாம்கள், பள்ளி கள், மசூதிகள், மக்கள் நிறைந்த பகுதிகள் எனக் குறிவைத்து தாக்கி இனப்படுகொலை செய்கிறது இஸ்ரேல் ராணுவம்.  செயற்கை நுண்ணறிவு  ஆயுத அமைப்புகள்  அமெரிக்க மென்பொருள் தளமான பலாண்டீர் டெக்னாலஜிஸ் (Palantir Techno logies) “லாவெண்டர்”, “

காஸ்பல்” மற்றும் “வேர்’ஸ் டாடி?” போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம்: - தரவுகளை செயலாக்கம் செய்கிறது  - இலக்குகளின் பட்டியலை உருவாக்குகிறது    - செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கு ஆயுதத் தொழில்நுட்பங்களை வழங்குகிறது  மேலும் இந்த நிறுவனங்கள் இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கும், பாலஸ்தீனர்களின் பயோமெட்ரிக் தரவுகளை சேமித்து வைக்கும் இஸ்ரேலின் மக்கள் தொகை, குடியேற்றம் மற்றும் எல்லைகள் ஆணையத்தின் (PIBA) மத்திய தரவுத்தளத்தை நிர்வகிப்பதற்கும் உதவி வருகின்றன.  ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் நிறுவனங்கள்  வாடகைத் தளங்களான  புக்கிங் (Booking) மற்றும் ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற நிறு வனங்கள் இஸ்ரேலால் ஆக்கிரமித்துள்ள நிலங்கள், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுக ள், ஹோட்டல்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி  சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கின்றன.  கனரக வாகன நிறுவனங்களின் பங்கு  ஆயுத நிறுவனங்கள் மட்டுமின்றி பின் வரும் நிறுவனங்கள் கனரக வாகனங்களைக் கொடுத்து இஸ்ரேலுக்கு உதவி வருகின்றன:  -    கேட்டர்பில்லர் (Caterpillar) -    ராடா எலெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் (இத்தாலியைச் சேர்ந்த லியோனார்டோ நிறுவனத்துக்குச் சொந்தம்) -    

ஹெச்.டி. ஹுண்டாய் (HD Hyundai) - தென்கொரியா -    வோல்வோ குழுமம் (Volvo Group) - ஸ்வீடன்  காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் ஒவ் வொரு நாளும் பாலஸ்தீனர்களின் வீடு களை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தரை மட்டமாக்கி வருகிறது. அதற்குத் தேவையான புல்டோசர்கள் உள்ளிட்ட கனரக வாகனங் களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.  எரிசக்தி மற்றும் வேளாண் துறையில் நிறுவனங்களின் பங்கு  - எரிசக்தி துறை: - டிரம்மாண்ட் கம்பெனி (Drummond Company) - அமெரிக்கா - கிளென்கோர் (Glencore) - சுவிட்சர்லாந்து இவை இஸ்ரேலுக்குத் தேவையான மின்சா ரம் தயாரிப்பதற்கான நிலக்கரியை விற்பனை செய்யும் முதன்மை நிறுவனங்களாக உள் ளன. நிலக்கரியின் பெரும்பான்மை இறக்கு மதி கொலம்பியாவில் இருந்தும் வருகிறது. முதலீட்டு நிறுவனங்களின் உதவி  அமெரிக்கப் பன்னாட்டு முதலீட்டு நிறு வனங்களான பிளாக்ராக் (BlackRock) மற்றும் வான்கார்ட் (Vanguard) ஆகிய நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பாபெட், ஐபிஎம், லாக்ஹீட் மார்ட்டின் எனப் பல நிறுவனங்களின் மீது முதலீடு செய்து அந்த நிறுவனங்களின் மிகப்பெரும் பங்குதாரர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் உள்ளன.  கார்ப்பரேட்டுகளுக்கும் சர்வதேசச் சட்டம்  அறிக்கையின்படி,

காலனித்துவ முயற்சி களும் அவற்றுடன் தொடர்புடைய இனப்படு கொலைகளும் வரலாற்று ரீதியாக கார்ப்ப ரேட் துறையால் ஊக்குவிக்கப்பட்டும் செயல் படுத்தப்பட்டும் வந்துள்ளன. 2023 அக்டோபர் 7 காசா மீது இஸ்ரேல் போர் துவங்கிய பிறகு, காலங்காலமாக பாலஸ்தீனர்களை அழிக்கவும், ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திற்கும் உதவிய மற்றும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் தற்போது இனப் படுகொலை பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளன.  பாலஸ்தீன நிலத்தைத் தொடர்ந்து ஆக்கிர மிப்பு செய்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கை “காலனித்துவ இனவாத முதலாளித்துவத் திற்கு” ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. அந்த  சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் லாபம் பெறுகின்றன. போரின் பொருளாதார பரிமாணம்  இந்த போர் ஒரு இலாபகரமான வணிகமாக இருந்து வருகிறது: - 2023 முதல் 2024 வரை இஸ்ரேலின் ராணுவச் செலவு 65 சதவீதம் அதிகரித்து 46.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.  - பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆயுத,

தொழில்நுட்ப மற்றும் உள்கட்ட மைப்புத் துறை சார்ந்த பல நிறுவனங்களின் லாபம் 2023 அக்டோபர் முதல் கணிசமாக அதிகரித்துள்ளன.  -டெல் அவிவ் பங்குச் சந்தை முன்னெப் போதும் இல்லாத வகையில் 179 சதவீதம் அதிகரித்து சந்தை மதிப்பில் சுமார்  157.9 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது சர்வதேச சட்டக் கடமைகள்  அல்பனீஸின் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட முக்கிய அம்சங்கள்:  1. கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது தங்கள் வணிகக் கூட்டாளிகள் மூலமாகவோ மனித உரிமைகளை மீறுவதைத் தவிர்க்க சர்வதேசச் சட்டத்தின்படி கடமைப்பட்டுள்ளன.  2. கார்ப்பரேட் நிறுவனங்கள் மனித உரிமை களை மதிக்கின்றன என்பதை உறுதிப்படுத்து வதற்கு ஒவ்வொரு நாட்டு அரசுக்கும் முதன்மையான பொறுப்பு உள்ளது.  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்காமல் அதன் விநியோகச் சங்கிலிகளில் குற்றச்செயல் இருப்பது கண்டறியப்பட்டால், சர்வதேச சட்ட த்தின்படி அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். - தொகுப்பு : சேது சிவன்