பதவி உயர்வுடன்கூடிய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துக!
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - பதவி உயர்வுடன்கூடிய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஆரோக்கியராஜ் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். வையம்பட்டி வட்டாரச் செயலாளர் தாமோதரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஜெயராஜ் சிறப்புரை ஆற்றி னார். மாவட்ட பொருளாளர் சேசுராஜ் நன்றி கூறினார். தொடக்கக் கல்வித் துறையில் கண் துடைப்பாக 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந் தாய்வை அறிவித்து விட்டு, மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கி வருகிறது தொடக்க கல்வித் துறை. இதனை வன்மையாகக் கண்டித்தும், மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறை யில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளின் மீது விசாரணை மேற்கொண்டு, தவறிழைத் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரி யர் பொது மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப் படவில்லை. இதனால் உபரி ஆசிரியர் கள், மலைச்சுழற்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட் டோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் கல்விநலன் கருதி, ஆசிரி யர் தகுதித்தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை விரைந்து முடி வுக்குக் கொண்டு வந்து, பதவி உயர்வு டன் கூடிய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். அது வரை தொடக்கக் கல்வித்துறையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந் தாய்வை நிறுத்த வேண்டும். 2025-2026 ஆம் கல்வியாண்டில் பணி ஓய்வுபெறும் இடைநிலை ஆசிரி யர்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.