ஹூண்டாய் தொழிற்சாலையில் ஊதிய உடன்பாடுகளும் கூட்டுப்பேர உரிமையும்
ஹூண்டாய் தொழிற்சாலையில் சுமார் 2,460 தொழிலாளர்கள் நிரந்தர தொழி லாளர்களாகவும், 12,000-க்கும் மேற் பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வரு கின்றனர். இந்த ஆலையில் இரண்டு பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. அவை,
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் (HMIEU) மற்றும் யுனைடெட் யூனியன் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் (UUHE) ஆகும். ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் (HMIEU): 2007-இல் முதலில் தொழிற் சங்கத்தை அமைத்து ஒரே பதிவு பெற்ற சங்கமாக உருவானது. தொழிலாளர்கள் உருவாக்கிய இந்த தொழிற்சங்கம் சிஐடியுவின் இணைப்புச் சங்கமாகும். தற்போது 1,457 தொழிலாளர்கள் உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை சங்கமாக விளங்குகிறது.
யுனைடெட் யூனியன் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் (UUHE): தொழிலாளர்கள் உருவாக்கிய தொழிற் சங்கத்தை எதிர்கொள்வதற்கு நிர்வாகம் தனக்குச் சாதக மான இன்னொரு பணிக் குழுவை உருவாக்கி, அதனை படிப்படியாக 2011-இல் தொழிற்சங்கமாக பதிவு செய்து கொண்டது. இது நிர்வாக ஆதரவு பெற்ற சங்கமாகச் செயல்படுகிறது.
நிர்வாகத்தின் பாரபட்சமான அணுகுமுறை
கடந்த 15 ஆண்டுகளாக நிர்வாக ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் பல்வேறு சலுகைகளை நிர்வாகம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதே நேரத்தில், தொழிலாளர்களின் சட்டப் பூர்வமான உரிமைகளுக்காகவும் சமூக நல பாதுகாப்புத் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் சிஐடியு இணைப்புச் சங்கமான எச்எம்ஐஇயு (HMIEU) தொழிற் சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் பழிவாங்கும் நோக்கத்துடன் நிர்வாகம் எதிர்நிலையில் செயல்பட்டு வருகிறது.
பழிவாங்கல் நடவடிக்கைகள்
இந்த பழிவாங்கல் நடவடிக்கைகளில் பணி யிறக்கம், சம்பள வெட்டு, பணியிடை நீக்கம், டிஸ்மிஸ், வெளிமாநிலங்களுக்கு இடமாற்றம் செய்வது, வேலைப் பளுவை திணிப்பது, பணி வேலை மாற்றங்க ளுக்கு அனுமதி மறுப்பது, விடுப்புகளுக்கு அனுமதி மறுப்பது போன்ற பல்வகையான நடவடிக்கைகள் அடங்கும்.
தொழிலாளர்களின் உடல்நலப் பிரச்சனைகள்
இந்த ஆலையில் சமீபகாலமாக பணிச்சுமை, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் மார டைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் சார் நோய்களுக்கு ஆட்பட்டு மரணமடையும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 தொழிலாளிகள் (கோவிட்கால மரணங்கள் தனி) மேற்கண்ட காரணங்களுக்காக மரணம் அடைந்தி ருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்களின் மர ணத்திற்கு முக்கியக் காரணங்களாக உற்பத்தித் திணிப்பு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் நிர்வாகத்தின் அணுகுமுறை அமைந்துள்ளது.
பூபதியின் மரணம்
பூபதி என்கிற ஒரு தொழிலாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் பணித்தலத்திலேயே அவர் மரணமடையும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து ஆலைக்குள் மாதக்கணக்கில் உணவுப் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட உயர்ந்தபட்ச வடிவங்களையும் அனைத்து தொழிலாளர்களின் ஆதரவோடு மேற்கொண்டு, அந்த குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத் தொகையாக ₹17 லட்சம் நிர்வாகத்திடம் பெற்றுக் கொடுத்ததுடன், இறந்த தொழிலாளியின் குழந்தைகளின் படிப்புச் செல விற்காக தொழிலாளர் துறை அமைச்சரின் நேரடி உத வியையும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுத்தது சிஐடியு சங்கத்தின் பெருமைமிகு பணிகளாகும்.
நிர்வாகத்தின் பாரபட்சமான பேச்சுவார்த்தை
இக்காலகட்டங்களில் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற - தொழிலாளர் நம்பிக்கையை பெறாத சிறிய தொழிற்சங்கத்திற்காக அவர்களுக்கான சந்தாவை நிர்வாகமே பிடித்து பெரும்பான்மை சங்கம்போல் காட்டிக் கொள்வதும், பெரும்பான்மை சங்கமான சிஐடியு தொழிற்சங்கத்தை சிறுமைப்படுத்தும் வகை யில் நிர்வாக நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டு தொழிலாளர்களை அச்சுறுத்துவதும், ஊதிய உடன் பாடு போன்ற பிரச்சனைகளில் நிர்வாக ஆதரவு பெற்ற சிறிய சங்கத்தோடு மட்டுமே உடன்பாடு ஏற்படுத்திக் கொள்வதும் தங்கள் அணுகுமுறையாக நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
தற்போதைய ஊதிய பேச்சுவார்த்தை
2024 ஏப்ரல் முதல் அமலாக வேண்டிய ஊதிய உயர்வு, பொது கோரிக்கைகள் மீதான பேச்சு வார்த்தையை பெரும்பான்மை தொழிற்சங்கத்துடன் ஒருமுறை கூட ஹூண்டாய் நிர்வாகம் பங்கேற்க முன் வரவில்லை. கடந்த நான்கு ஊதிய உடன்பாடுகளை சிஐடியு தொழிற்சங்கத்தை தவிர்த்து, நிர்வாக ஆதரவுச் சங்கத்தோடு மட்டுமே ஹூண்டாய் நிர்வாகம் மேற் கொண்டு வந்தது. தொழிலாளர் துறையும் எச்எம்ஐஇயு (HMIEU) தொழிற்சங்கத்தின் கோரிக்கை மீது தொழி லாளர்கள் உணர்வுகளை மதிக்கக் கூடிய வகையில் ஒருமுறை கூட தற்போதைய ஊதிய பேச்சுவார்த்தை யில் ஹூண்டாய் நிர்வாகம் பங்கேற்க வைக்க வில்லை.
பெரும்பான்மை தீர்மானிக்கும் முறை
ஹூண்டாய் நிர்வாகம் சொல்கிற ஒரே காரணம், பெரும்பான்மை சங்கமாக நிர்வாகம் ஆதரவு பெற்ற சங்கமே இருக்கிறது என்பதாகும். ஆனால் நிர்வாகமே தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்து கொள்கிற “சந்தா வின்” மூலமாக கணக்கு காட்டப்படும் அந்த எண்ணிக் கையை வைத்துதான் பெரும்பான்மை தீர்மானிக்கப் படும் என்றால், அது மோசடியே தவிர வேறல்ல. பெரும் பான்மை தொழிலாளர்கள் விரும்பி சிஐடியு தொழிற் சங்கத்தில் தங்கள் சந்தாவை செலுத்தி உறுப்பினர் எண்ணிக்கையை உறுதி செய்திருக்கிறார்கள்; அதற்கான ஆவணங்களையும் அரசிடம் சமர்பித்து வருகிறது எச்எம்ஐ இயு (HMIEU).
ரகசிய வாக்கெடுப்பே தீர்வு
பெரும்பான்மை சங்கத்தோடு ஊதிய உடன்பாடு ஏற்படுத்திக் கொள்வது என்பது ஒரு சிறந்த கொள்கை தான். இந்த பெரும்பான்மையை தீர்மானிக்க தற்போது இருக்கிற அனைவரும் ஏற்றுக் கொண்ட நடைமுறை கள் உள்ளன. ஆவணங்களின் மூலமாக சரிபார்த்து பெரும்பான்மையை உறுதி செய்வது ஒரு வழி. ஒரு தொழிலாளி இரண்டு சங்கத்திலும் உறுப்பினர் சந்தாவை செலுத்துவதன் மூலம் பெரும்பான்மை தீர்மானிப்பதில் குழப்பங்கள் நேருமானால், தெளி வான முடிவை எடுப்பதற்கு இதுவரையிலும் இருக்கிற ஒரே வழிமுறை - பல வழக்குகளில் நீதிமன்றங்களும் வழிகாட்டிய நடைமுறை - ரகசிய வாக்கெடுப்புதான்.
வெற்றிகரமான முன்மாதிரிகள்
யமஹா தொழிற்சாலையிலும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலும் இன்னும் பல ஆலைகளிலும் இரண்டு சங்கங்கள் சம்பந்தமான பெரும்பான்மையை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டபோது உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட முடிவுகளும் தீர்ப்புகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையைத்தான் முன்மொழிந்தன. சமீபத்தில் மிகப் பெரிய ரயில்வே துறையிலும் நெய்வேலி நிலக்கரிச் சுரங் கத்திலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்வு ரகசிய வாக்கெடுப்பின் மூலமே நிலைநாட்டப் பட்டுள்ளது.
உற்பத்தித் திணிப்பும் நவீனமயமாக்கலும்
கடந்த நான்கு ஒப்பந்தங்களில் நிரந்தரத் தொழிலா ளர்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு துரோக ஒப்பந்தங்கள் நிர்வாக ஆதரவு பெற்ற சங்கத்தோடு ஏற்படுத்தப்பட்டது. இதனால் 300 தொழிலாளர்கள் உற்பத்தியில் இருந்து விடுவிக்கப்பட்டு நிர்வாக ஊழி யராக மாற்றப்பட்டார்கள். இக்காலத்தில் 153-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ், மரணம், வேலையை விட்டு வெளியேற்றம் என்கிற பெயரில் நிரந்தரத் தொழி லாளிகள் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. மொத்த நிரந்தரத் தொழிலாளிகளில் சுமார் 450 பேர் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான உற்பத்திச் சுமையையும் தற்போது பணியில் இருக்கும் நிரந்தரத் தொழிலாளிகள் சுமக்க வேண்டிய உற்பத்தித் திணிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள்
இத்தகைய பின்னணியில் சிஐடியு தொழிற்சங்கம் உயர்நீதிமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என ஹூண்டாய் நிர்வாகத்துக்கு எதிராக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு கோரிக்கை தொழிலா ளர் துறையின் முன்னால் எழுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த பின்னணியில்தான் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக ளிலும் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் நிர்வாகத்துக்கு எதிராக 23.6.2025 அன்று வேலை நிறுத்தம் நோட்டீஸ் சிஐடியு வழங்கியிருக்கிறது. நிறைவாக, சட்டத்தின் நியாயத்தை நாம் விரும்புகி றோம். எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை தொழிலா ளர்களின் கருத்துக்களை அறிந்து எடுக்க வேண்டும் என்ற பரந்த ஜனநாயகத்தை நாம் வலியுறுத்துகிறோம். அதற்கான வாய்ப்புகளை ஹூண்டாய் நிர்வாகம் மற்றும் அரசு தொழிலாளர் துறை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் சுமூகத் தீர்வை எதிர்பார்க்க லாம். கூட்டுப்பேர உரிமையை உண்மையான நோக் கத்தில் செயல்படுத்துவதன் மூலமே நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் மேன்மைமிக்க உறவுகள் அர்த்தமுள்ளதாக ஆக்கப்படும்.
கட்டுரையாளர் : தலைவர், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் (CITU)