tamilnadu

img

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், மக்களுக்கு ரூ.2 ஆயிரம் பாஜக - அதிமுக அரசுகளின் வாக்குச் சேகரிப்பு வியூகம்

பெரம்பலூர், ஏப்.10-பெரம்பலூர் மக்களவை தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளராக போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று பெரம் பலூரில் பிரச்சாரம் நடைபெற்றது.பழைய பேருந்து நிலையம் காந்திசிலை முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் தலைமை வகித்தார்.திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமாகிய ஜெயசீலன் முன்னிலை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பிரச் சார உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:கோயம்புத்தூருக்கு ஆதிசிவன் சிலை திறப்பு விழாவில் நேரில் பங்கேற்ற மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. இவர்கள், இப்போது வாக்கு கேட்டு தமிழகத்துக்கு வருகின்றனர். 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாத மோடி, சிறு விவசாயிகளுக்கு ஆண் டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக தற்போது கூறுகிறார். மத்திய அரசு அளிக்கும் ரூ.6 ஆயிரம், மாநில அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் திட்டங்கள், மக்களவை தேர்தலை மனதில் வைத்து, மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்டவை.பணத்தை நம்பித்தான் பாஜகவும், அதிமுகவும் இந்தத் தேர்தலை சந்திக் கின்றன. ஏழை மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய மறுக்கும் மோடி தலைமையிலான பாஜகஅரசு, கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் வங்கிகளில் பெரும் தொகையை கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட் டுக்கு தப்பித்து ஓடுவதற்கு உடந்தையாக இருக்கிறது. அரசு மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெருக்க ஆர்வம் காட்டும் மாநில அதிமுக அரசுக்கு மக்கள் பிரச்சனைகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவதில் ஆர்வம் இல்லை. நியாய விலைக் கடைகளில் எண் ணெய், மண்ணெண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தற் போதைய சூழலில் தமிழகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. இந்நிலை மாற பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என்.செல்லதுரை, ஆர்.அழகர்சாமி, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி எஸ்.பி.டி.ராஜாங்கம், ஏ.கணேசன், ஆர்.முருகேசன், எம்.கருணாநிதி மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், திமுக நகரச்செயலர் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிகட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.