ஜனநாயக முறைப்படி ஆட்சிநடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்துவருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள்கடைபிடிக்கப்பட்டாலும், தேர்தல்கள் நடைபெறும்போது பெரும்பாலான நாடுகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்தான் இந்த தேர்தல் அடையாள மை என்பது. வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது.