ஜனநாயக முறைப்படி ஆட்சிநடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்துவருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள்கடைபிடிக்கப்பட்டாலும், தேர்தல்கள் நடைபெறும்போது பெரும்பாலான நாடுகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்தான் இந்த தேர்தல் அடையாள மை என்பது. வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது. இது அவர் வாக்களித்ததற்கு அத்தாட்சியாக அமைகிறது. போலியாக யாரேனும் வாக்களிக்கவந்தால் அவருடைய இடதுகையில் உள்ள நடுவிரலில் இந்த மை வைக்கப்படுகிறது. ஜனநாயகத்தைக் காப்பதில் இந்த மை என்பது மிகவும் சிறிய பொருளாக இருந்தாலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மை வைக்கப்பட்ட நாளில் இருந்துகுறைந்தபட்சம் 20 நாள்களுக்கு அழியாது.இதனால் ஒருமுறை வாக்கு செலுத்தியவர் மறுபடி மறுபடி வாக்கை செலுத்தமுடியாது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்த வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் நிறுவனம் நமது நாட்டில் செயல்பட்டு வருகிறது. இது கர்நாடகாவில் உள்ளதசரா கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்றநகரமான மைசூர் நகரத்தில் இயங்கி வருகிறது. மைசூர் வண்ணப்பூச்சுகள் மற்றும்வார்னிஷ் லிமிடெட்
(Mysore Paint & varnishes Limited) என்ற நிறுவனம்தான் மிக நீண்டகாலமாக இந்தியாவில் இந்த மையை தயாரித்து வரும் பெருமைபெற்ற நிறுவனம் ஆகும். 1937ம் ஆண்டுமைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார் இந்த நிறுவனத்தை வண்ணப் பூச்சுகள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிப்புக்காகத் தொடங்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு,இந்த நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டது. 1962ம் ஆண்டு நம் நாட்டின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் அடையாளமை தயாரிக்கும் அரும்பணி இந்த மைசூர் வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல் இப்போது வரையும் இந்தப் பணியை இந்த நிறுவனமே சிறப்பாகச் செய்து வருகிறது. இந்தமையை தயாரிக்க எந்தெந்த பொருள்கள்என்ன என்ன அளவில் கலக்கப்படுகிறது என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. 5 மிலி, 7.5மிலி., 20மிலி, 500 மிலி,80 மிலி ஆகிய அளவுகளில் பாட்டில்களில் மை அடைக்கப்பட்டு தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. 5 மிலி அடையாள மை 300வாக்காளர்களுக்குப் போதுமானது என்றுகூறப்படுகிறது. இந்த மையில் அடங்கியிருக்கும் முக்கிய வேதிப்பொருள் சில்வர் நைட்ஆகும். இந்த வேதிப்பொருள் கருமையாகஉள்ள ஒரு கரைசலுக்கு மேலும் அதிகஅடர்த்தியைக் கொடுக்கும் தன்மையுடையது. விரலில் இடப்படும்போது விரலில் உள்ள தோலோடு இந்த சில்வர்நைட் வினைபுரிந்து சில்வர் குளோரைடாக மாறுகிறது. இந்த சில்வர் குளோரைடு நீரில்கரையாத தன்மையுடையது. அதனால்தான் வாக்காளர் அடையாள மைஇடப்பட்டு ஒருவர் வாக்கு செலுத்திவிட்டு வந்தபிறகு அதை அவரால் எளிதாகஅழிக்கமுடிவது இல்லை. மேலும் இந்தசில்வர் குளோரைடை வெந்நீர், ஆல்கஹால், நகச்சாயத்தை அழிப்பதற்கு பயன்படும் வேதிப்பொருள்கள் (nail polish remover) மற்றும் ப்ளீச்சிங் (bleaching) செய்வதால் அழிக்கமுடியாது. விரலில் மைஇடப்பட்ட பகுதியில் இருக்கும் தோல்பழையதாகி அகன்று புதிய தோல் வரும்வரை இந்த மை அழியாமல் அப்படியேஇருக்கிறது. அதனால் இந்த அழியாத,அழிக்கமுடியாத மை தேர்தல்களில்அதிகஅளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய தோல் மறைந்து புதிய தோல் வளரஆரம்பித்தவுடன் இந்த மை இடப்பட்ட அடையாளம் இல்லாமல் போய்விடுகிறது.இந்தியாவில் மட்டும் இல்லாமல் இது போல தேர்தல் சமயங்களில் அடையாளமையை விரலில் வைக்கும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது இருந்துவருகிறது. தாய்லாந்து,சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்றநாடுகளுக்கும் இந்த பெருமைக்குரிய அடையாள மை இந்தியாவில் இருந்துஏற்றுமதி ஆகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும்கம்போடியா நாட்டில் நடைபெறும் தேர்தல்களிலும் இந்த அடையாள மையையே பயன்படுத்துகிறார்கள்.
- சிதம்பரம் ரவிச்சந்திரன்