politics

img

கர்னல் சோபியா குரேஷி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ம.பி.மே.14- கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை பேசிய பாஜக அமைச்சருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா"பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சையாகும் வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சு இணையத்தில் பரவிய நிலையில் இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு இவரை விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.