states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

யுஜிசி புதிய விதிமுறைகள் என்ற பெயரிலான ஒன்றிய அரசின் அடக்குமுறை கூட்டாட்சி அமைப்பு, மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சி ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கல்வியை காவிமயமாக்கும் வெட்கக்கேடான முயற்சி இது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான இயக்கம் ஊக்கம் பெற்றுள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்தரப்பிரதேச பாஜக அரசின் கனவு தோல்வியடைந்தது. முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். பிறகு கனவு காணலாம். குறிப்பாக பாஜகவின் மில்லியன், டிரில்லியன் விளையாட்டு என்னவென்று ஏழை மக்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங்

நம் நாட்டின் அரசியலமைப்பு மதச்சார்பற்ற நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதனால் பாஜகவின் இந்துராஷ்டம் என்ற கனவு நனவாக துளி அளவு கூட சாத்தியம் இல்லை.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வழக்கம் போல பீகார் மாநிலத்திற்கு வந்து செல்வார். அனல் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க அவர் வரவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் பாட்னா பல்கலைக்கழகத்தை மத்திய அந்தஸ்துக்கு கூட உயர்த்த முடியவில்லை. வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?