மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக கேரள மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணியும் தர்ணாவும் நடத்தினர். திருவனந்தபுரம் ஏஜீஸ் அலுவலகம் முன்பு நடந்த தர்ணாவை எப்எஸ்இடிஓ பொதுச்செயலாளர் டி.சி.மாத்துக்குட்டி துவக்கி வைத்தார். அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மக்கள் விரோத மத்திய பட்ஜெட் குறித்து பேசினர்.