மரங்கள் இல்லாத நகரங்களில்...!
மரங்கள் அடர்ந்த இடங்கள் நகர வாசிகளுக்கு எண்ணற்ற சூழல், உளவியல் பயன்களை தரு கின்றன. மட்டுமல்லாமல் மரங்கள் குறைந்த வருமானம் உடைய குடும் பங்களில் இருந்து வரும் மாணவர் களின் கல்வித் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது என்று யூட்டா பல்கலைக் கழக சமூக ஆய்வாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆஷ் மரங்கள் கடந்த பத்தாண்டில் வட அமெ ரிக்கா முழுவதும் எமரால்டு ஆஷ் போரர் (emerald ash borer) என்ற ஆக்கிரமிப்பு வண்டினம் மத்திய கிழக்கு நகரங்கள் அனைத்திலும் வீதி கள், தோட்டங்களில் இருந்த மில்லி யன் கணக்கான உள்ளூர் ஆஷ் மரங் களை அழிக்கத் தொடங்கின. இதன் பின்னர் இதனால் உண்டான பாதிப்பு பற்றி ஆராய சிக்காகோ மாநகரப் பகுதியில் மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் அவர்களின் கல்வித் தரம் பற்றி பொருளாதார விஞ்ஞானி அல்பேர்ட்டோ காசியா (Alberto Garcia) ஆராய்ந்தார். மரங்களின் அழிவால் சூழல் இழப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு களுக்கு இடையில் நிலவும் சிக்கலான தொடர்பை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்கூறின. கடுமையான ஆக்கி ரமிப்பால் பாதிக்கப்பட்ட சிக்காகோ மாநகரப் பகுதியில் பசுமைப் பரப்பின் இழப்பால் கல்வித் தரத்தில் ஏற்படும் பாதிப்பு பற்றி இந்த ஆய்வு பகுப் பாய்வு செய்தது. இப்பிரதேசத்தின் மிகப் பொதுவான உள்ளூர் மர இனம் ஆஷ் (Ash) மரங்கள். நகரில் மொத்த மர இனங்களில் இது 18% அல்லது 85,000 மரங்கள் ஆகும். 2010-2020 காலகட்டத்தில் இவற் றின் பாதி மரங்கள் இழக்கப்பட்டன. மீதியுள்ளவை ஏற்கனவே இறந்து விட்டன அல்லது குறைய ஆரம்பித்தன என்று மரங்கள் அடர்ந்த பகுதிகளை (Arboretum) பாதுகாக்கும் மோர்ட்டன் (Morton) என்ற அமைப்பு கூறுகிறது. 2003 முதல் 2012 வரை இல்லினாய் மாகாணத்தில் எட்டாவது வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் ஆராயப்பட்டது. மரங் கள் அழிந்த பகுதியில் இருந்த பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. குடும்ப வருமான வேறுபாடுகளும் ஆய்வில் ஒரு அம்சமாக உட்படுத் தப்பட்டது. குறைவான மரங்கள் உள்ள சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் பசுமை இழப்பால் பாதிக்கப்படவில்லை. இது குறித்த ஆய்வுக் கட்டுரை உலகளாவிய சூழல் மாற்றம் (Global Environmental Change) என்ற இதழில் வெளிவந் துள்ளது. பென்சில்வேனியா மாகாண (Pen state) பல்கலைக்கழகத்தில் சமீ பத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும் யூட்டா சமூக மற்றும் நடத்தையியல் கல்லூரியின் சூழல், சமூக மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான பள்ளி பேராசிரியருமான சூழலி யலாளர் மிஷேல் லீ (Michelle Lee) இந்த ஆய்வில் இணை ஆசிரியராக பணி புரிந்தார். மேம்பட்ட பசுமை நிறைந்த சூழலில் இருந்து வந்த மாண வர்கள் ஆரம்பத் தேர்வுகளில் சிறந்து விளங்கினர். மனித நல வாழ்வுக்கு அவசியமாகும் மரங்கள் அதிக பசுமைப் பரப்புள்ள சுற்றுப் புறங்களைக் கொண்ட மாணவர்கள் ஆண்டின் இறுதியில் கணிதம், மொழி, கலை பாடங்களில் அதிக தேர்ச்சி பெற்றனர். பசுமை இலைகளு டன் உள்ள சுற்றுப்புறங்கள் கல்வியில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என் பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டு கிறது. இல்லினாய் நிலைப்படுத்தப் பட்ட தேர்வு மற்றும் ஆக்கிரமிப்பு வண் டின் பரவல் குறித்த தரவுகள் செயற் கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராயப்பட்டன. மரங்கள் அற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சித் தரம் தேர்ச்சிக்கு உரியதை விட 1.2 முதல் 2% வரை குறைவாக இருந்தது. மரங் களற்ற பணக்காரப் பள்ளிகளில் பயி லும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் இருந்து வரும் மாண வர்களின் தரம் மோசமாக இருந்தது. பசுமையில்லாத நகரங்களில் வெப்பத் தீவுகள் (Urban heat islands) அதிக மாக இருக்கும். பசுமைப் பரப்புகளால் ஏற்படும் இயற்கையான குளிர்ச்சிக்கு வழியில்லாமல் கான்க்ரீட் கட்டிடங்க ளால் வெளியிடப்படும் வெப்பம் நக ரைச் சுற்றி வருவதால் உருவாகும் விளைவே நகர வெப்பத் தீவு விளைவு எனப்படுகிறது. மரங்கள் இல்லாமல் போவதால் காற்று மாசு அதிகமாகும். மரங்க ளால் மனிதர்கள் பெறும் உடலியல், உளவியல் நன்மைகள் கிடைக்காமல் போகும். சூழல் மாற்றங்கள் பலவீன மான மக்களை பாதிப்பது பற்றி இந்த ஆய்வு விளக்குகிறது. பசுமை நிறைந்த இடங்கள் இல்லாமல் போவதால் கல்வி போன்ற வாழ்வின் வளமான நல வாழ்விற்குரிய இன்றியமையாத தேவைகள் மக்களுக்கு கிடைக்கா மல் போகின்றன. நகரப் பசுமையிடங் கள் மனிதச் செயல்பாடுகளை வடி வமைப்பதில் முக்கியப் பங்கு வகிக் கின்றன என்பதால் நகர மரக் கவிகை சூழல் பகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலி யுறுத்துகிறது.