சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்சுக்லா ஜூலை 14ஆம் தேதி பூமி திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் ஆக்ஸியம் ஸ்பேக்ஸ் எக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 25 ஆம் தேதி சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் ஆய்வை முடித்துக் கொண்டு மீண்டும் ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு திரும்புகின்றனர்.
ஜூலை 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு பூமி திரும்பும் டிராகன் விண்கலம் கடலில் விழும் வகையில் நாசா திட்டமிட்டுள்ளது