states

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் பலமான தாக்குதல்

 இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இலக்குகளை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முன்னாள் பாதுகாப்புத்துறை மூத்த  அதிகாரி டாக்டர் அலி லாரிஜானி, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது. இச்சூழலில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேல் தலைநகரில் பலத்த தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் கோர்ரம்ஷார்-4, காதிர், இமாத், கெய்பர் ஷெகன்’ போன்ற அதி நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் நடத்தும் போருக்கு உள்நாட்டில் குறையும் ஆதரவு

  ஈரான் மீதான டிரம்ப்பின் போருக்கு உள்நாட்டு அதிகாரிகளிடையே பெரிய ஆதரவு இல்லை என தெரிய வந்துள்ளது. ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை. அந்நாட்டின் மீது டிரம்ப் நடத்தும் போருக்கு பின்னால் இஸ்ரேலின் லாபி தான் உள்ளது எனக்கூறி  அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர் போருக்குள் நாட்டை தள்ளுவது  நல்லதல்ல என்று புரிந்து வைத்திருந்த டிரம்ப்பை இஸ்ரேல் உயரதிகாரிகள், அமெரிக்க ஊடகத்தில் பணியாற்றும் சக்திவாய்ந்த இஸ்ரேல் ஆதரவு நபர்களின் அமெரிக்காவே முதன்மை (america first ) என்ற பிரச்சாரம் போருக்குள் செல்ல வைத்துள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவை சுற்றிவளைப்பதே நேட்டோவின் குறியாக உள்ளது

நேட்டோவின் விரிவாக்கம் ரஷ்யாவை சுற்றிவளைப்பதை நோக்கியே உள்ளது என்றும், அதன் விரிவாக்க திட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா  தெரிவித்துள்ளார். மேலும் நேட்டோவின் செயல்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட உலகம் முழுவதும் தனது செல்வாக்கை நிலைநாட்ட நேட்டோ முயற்சித்து வருவதாகவும், இதற்காக மறைமுக வழிகளை  அந்த அமைப்பு கையாளுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஈரான் லெபனானுக்கு மனிதாபிமான உதவிகள்: சீனா அறிவிப்பு

பெய்ஜிங்,மார்ச் 18- அமெரிக்கா இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் லெபனானுக்கு மனிதாபி மான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.  அமெரிக்கா இஸ்ரேல் மேற்கு ஆசி யாவில் தூண்டி விட்டுள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரால் ஈரான், லெபனான், ஜோர் ்டான், ஈராக் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் கடுமையான மனிதாபி மான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்  சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பா ளர் லின் ஜியான் போரால் பாதிக் கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களின் துயரத்தைத் தணிக்க சீனா அவசர மனிதாபிமான உதவிகளை வழங் கும்.போரை நிறுத்தி, மனிதாபிமான நெருக்கடி மேலும் பரவாமல் தடுக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கும்  என்று அறிவித்துள்ளார். ஈரானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, ஈரான் மீதான தாக்கு தல்களை நிறுத்துமாறு அமெரிக்கா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க வளை குடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களையும் சீனா விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெறிக்கு பதிலடி

மாஸ்கோ,மார்ச் 18- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கியூபாவை ஆக்கிரமிக்க போகிறேன் என மிரட்டியுள்ள நிலை யில் கியூபாவிற்கு ரஷ்யா முழு ஆதரவு தெரி வித்துள்ளது.  கியூப ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கனெலை  ஆட்சியில் இருந்து அகற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இதன் பின்னணியில் கியூபா ஒரு வளமான நாடு அதனை ஆக்கிரமிப்பேன், ஈரானுக்கு பிறகு கியூபா தான், கியூபா விஷ யத்தில் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.  அந்நாட்டை ஆக்கிரமிப்பது எனக்குக் கிடைக்கும் “பெருமை”  என பகிரங்கமாக அறி வித்தார்.  டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக, கியூபாவுடனான உறவு குறித்து ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: கியூபாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இது குறித்து கியூபா அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மூச்சுத் திணறவைக்கும் அமெரிக்காவின்  தடையால் பெரும் பொருளாதார மற்றும் மனிதாபி மானப் பிரச்சனைகளை கியூபா சந்தித்து வரு கிறது. கியூப அரசு மற்றும் அதன் மக்களுடன் ரஷ்யா தனது அசைக்க முடியாத ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார். கியூபா தனது எரிசக்தி தேவையில் 60 சதவிகிதத்தை இறக்குமதி மூலமே ஈடுகட்டி வரு கிறது. கடந்த காலத்தில் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது. தற்போது டிரம்ப் வெனிசுலா மீது போர் தொடுத்து அந் ்நாட்டு ஜனாதிபதியை கடத்தி கியூபாவிற்கான எண்ணெய் விநியோகத்தை தடை செய்துள்ளார். மேலும் ஜனவரி 9 முதல் ரஷ்யாவிலிருந்து எந்த எண்ணெய் இறக்குமதியும் கியூபாவிற்கு வந்து சேரவில்லை. இவற்றோடு அமெரிக்கா விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடைகளின் காரணமாக கியூ பாவின் மின் உற்பத்தி முற்றிலுமாக முடங்கி யுள்ளது. இதனால் அந்த நாடு மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரு கிறது.