headlines

img

வேலை இல்லா வல்லரசு!

வேலை இல்லா வல்லரசு!

இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் என்று ஒரு புறம் பெரு மிதப்படுகிறோம். ஆனால் மறுபுறம் அந்தப் பெருமிதத்தின் கீழே, ஆழத்தில், ஒரு கசப்பான உண்மை நெளிவது கண்முன் தெரி கிறது. இந்தக் கொடும் முரண்பாட்டை  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘இந்தியப் பணிச் சூழல் அறிக்கை 2026’ அம்பலப் படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் 20 முதல் 29 வயதிற்குட்பட்ட 6 கோடியே 30 லட்சம் பட்டதாரிகளில், 1 கோடியே 10 லட்சம் பேர் முழுமையாக வேலை யில்லாமல் தவிக்கிறார்கள்.    இதில் மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், பட்டம் முடித்த ஓராண்டுக்குள் நிரந்தரமான சம்ப ளம் வாங்கும் வேலையில் சேருபவர்கள் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே. மீதமுள்ள 93 சதவிகி தம் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தற்காலிக வேலைகளிலும், தகு திக்குக் குறைவான பணிகளிலும், உணவு விநி யோகம் போன்ற நிச்சயமற்ற வாழ்வாதாரங்க ளிலும் தள்ளப்படுகிறார்கள். ஒரு பொறியியல் பட்டதாரி உணவு விநியோகம் செய்வது என்பது அந்தத் தனிநபரின் தோல்வி அல்ல; அது அந்த நாட்டின் அறிவுசார் மூலதனத்தை  முறையாகப் பயன்படுத்தத் தெரியாத அரசின் தோல்வி.

2004-05 முதல் 2023 வரையிலான காலத்தில், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாகினர். ஆனால் வேலை கிடைத்தது வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே. இதனால் பட்டதாரி வேலையின்மை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தச் சூழலில், டிரம்ப் நிர்வாகத்துடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்கா வின் விவசாய மற்றும் தொழிற்சாலைப் பொ ருட்களைப் “பூஜ்ஜிய வரி” முறையில் அனு மதிப்பது, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்க ளை (எம்எஸ்எம்இ) நிலைகுலையச் செய்யும். இந்தியாவின் 80 சதவிகித வேலைவாய்ப்புக ளைத் தாங்கிப் பிடிக்கும் இந்த உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைந்தால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் தீவிரமடையும்

இந்தியாவின் இளமைச் சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்  வாய்ப்பு. 2030-களுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள் தொகை முதியோரை நோக்கி நகரத் தொடங்கும். அதற்குள் இந்த 93 சதவிகித இளை ஞர்களை முறையான வருமானம் ஈட்டும் சக்தியாக மாற்றவில்லை என்றால், இந்தியா  பணக்கார நாடாவதற்கு முன்பே, ஏழை முதிய வர்களின் நாடாகிவிடும். இளைஞர்களின் கைகளில் வேலை இல்லாத நாடு, கையில் வெடிமருந்தை வைத்துக்கொண்டு நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தியாவின் எதிர் காலம் அமெரிக்க உடன்பாடுகளில் இல்லை; இளைஞர்களின் வேலை வாய்ப்பில்தான் இருக்கிறது.