headlines

img

பற்றாக்குறையும் பாரபட்சமும்

பற்றாக்குறையும் பாரபட்சமும்

வளர்ச்சி என்பது சீராக அமைந்தால் தான் ஆரோக்கியமானதாகும். இல்லையெனில் அது நோயாகிவிடும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பேச்சளவிலும் பெயரளவிலும் தான். இந்தியாவில் தயாரிப்போம் என்பது மாறி இப் போது அமெரிக்காவில் தயாரிப்போம் என்ற நிலைக்கு அம்பானியின் ரிலையன்ஸ் ரீபைன ரீஸ் முன்னேறியிருப்பதுதான் மோடி அரசின் சாதனை. எரிபொருள் உற்பத்தியில் அமெரிக்கா  முன்னேற முகேஷ் அம்பானி மூலதனம் போட்டு  தொழில் தொடங்குவதை டொனால்டு டிரம்ப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி வளர்ந்தால் இந்தியா வளர்ந்ததாகத் தானே அர்த்தம், ஆர்எஸ்எஸ் பரிவார அகராதியில்.

ஆனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியப் போரினால் கச்சா எண்ணெய் வரத்து நின்று விட்டது காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியா வின் நீண்டகால நட்பு நாடான ஈரான், இஸ்ரேல், அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டிக்காமல் இருந்துவிட்டு, அரபு நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்கியதை கண்டித்தது அமெரிக்க, இஸ்ரேல் விசுவாசம் அன்றி வேறென்ன?

ஆனால் எரிவாயு ஏற்றி வந்த இந்தியக் கப்பலுக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதால் ஈரான் அனுமதி தந்துவிட்டது என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் கூறினர். உண்மையில், ஈரான் தூதரக அதிகாரி, ஈரான் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்திய மக்கள் சமையல் எரி வாயு இல்லாமல் துன்பப்படுகின்றனர். அவர்களு க்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித் தோம். அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழி யாக அனுமதிக்கப்படுகின்றன என்று குட்டை உடைத்தது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்திய எரிசக்தி துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி, எரிவாயு தட்டுப்பாடு இல்லை. போதிய அளவு கையிருப்பு உள்ளது என்று கூறு கிறார். எதிர்க்கட்சிகள் தான் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன என்கிறார் சுகாதாரத்துறை  அமைச்சர் ஜே.பி.நட்டா. நெருக்கடியான சம யங்களில் கூட அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் நெருக்கடியான நிலை என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவா யுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பற்றாக்குறை பீதியால் முன் பதிவு அதிகமாகி விட்டதால், பதிவு கால இடை வெளியை நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்றும் நிர்ண யித்திருக்கிறோம் என்கிறார். ஏன் பதிவு இடை வெளியில் பாரபட்சம்? எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என்று சிலிண்டர் விலையை ரூ.60, ரூ.144 என உயர்த்தியது எந்த வகை நியாயம்? ஆனால் பற்றாக்குறையைச் சமாளிக்க கிராமப்புற மக்கள்தான் பலியாடு களா? அவர்கள் இரண்டாம் தரமா?