பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
ஈரான் மீதான தாக்குதலால் உருவான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு விநியோகத் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் சந்தையுடன் இந்தியா கொண்டுள்ள பிணைப்பின் காரணமாக, இது இந்தியாவின் சமநிலை மீது கடும் பாதிப்புகளை உண்டாக்கும்.
பத்திரிகையாளர் ராணா அய்யூப்
இந்தியா உலக அரங்கில் பல உயர்மட்டத் தொடர்புகளைக் கொண்டிருந்தபோதிலும், முக்கியமான உலகளாவிய சக்திகள் மீது இந்தியாவின் உண்மையான செல்வாக்கு அல்லது பிடிமானம் (Leverage) மிகக் குறைவாகவே உள்ளது என்ற உண்மையை மோடி அரசின் மீது நன்மதிப்பு கொண்டவர்கள் உட்பட பல இந்திய வெளியுறவுக்கொள்கை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்டோரின் பிரச்சனைகளை அதிகமாக விவாதிக்க ஜனநாயக முறையில் விவாதம் நடைபெற அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் பேசும்போது அடிக்கடி பேச்சுகளை நீக்குவதை கைவிட வேண்டும். அப்படி நீக்கினால் அது அர்த்தமற்ற பேச்சாகிவிடும்.
யுபிபிஎல் கட்சி தலைவர் ஆர்.என்.சின்ஹா
பாஜகவின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மிக மோசமானது, ஆபத்தானது. பாஜகவின் லட்சியமே இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதுதான். அப்படி நடந்தால் நாட்டில் இட ஒதுக்கீடு முழுமையாக நீக்கப்பட்டுவிடும். இஸ்லாமியர்களை துன்புறுத்துவதே பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் நோக்கம்.
