tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

விறகு அடுப்பால்  உடல் நல குறைபாட்டை எதிர்கொள்ளும்  சமையல் உதவியாளர்கள்

ஈரான் உடன் அமெரிக்கா-இஸ்ரேல் போரிட்டு வருவதால்  உலகம் முழுவதும் கேஸ் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி யில் இந்தியா முழுவதும் பிஎம் போ ஷான் (PM POSHAN) மதிய உணவுத் திட்டம் தயாரிக்கும் பணி பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.  10.35 லட்சம் பள்ளிகளில் படிக்கும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 கோடி மாணவர்கள் இதனால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின் முதுகெலும்பாக விளங்கும் 24 லட்சம் சமையல் உதவியாளர்களில் 90 சத விகிதம் பேர் பெண்களே.  இவர்களுக்கு மாதந்தோறும் வெறும் ரூ.1,000 மட்டுமே கௌரவ ஊதியமாக வழங் கப்படுகிறது. கேஸ் தட்டுப்பாடால் இவர்கள் மீண்டும்  விறகு அடுப்பில் சமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் கண் எரிச்சல், நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது அந்தப் பெண்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

பிரிவினைவாதிகளுக்கு பயிற்சி உக்ரைன், அமெரிக்க நாட்டவர்கள் கைது இந்​திய எல்​லைப் பகு​தி​களில் இன மோதல்​களை தூண்​டும் வகை​யில் மியான்​மர் கிளர்ச்​சி​யாளர்​களுக்கு பயிற்சி அளித்ததாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.   பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு  மார்ச்  வரை என்ஐஏ காவலில் எடுத்து விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.   முறை​யான விசா மூலம் இந்​தியா வந்​த அவர்கள் பாது​காக்​கப்​பட்ட பகு​தி​யான மிசோர​முக்கு  முறை​யான அனு​ம​தி​யைப் பெறாமல் அங்கு சென்​றுள்​ளனர். மேலும் அங்கிருந்து எல்லை தாண்டி மியான்​மருக்​குள் நுழைந்​து, அங்குள்ள இனவாத ஆயுதக் குழுக்​களு​டன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 9 ஆண்டுகளில்  622 மலக்குழி மரணங்கள் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 622 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது சுமார் 622 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரி ழந்துள்ளனர்.  அரசு கொடுத்த புள்ளிவிவரங்களில் இருந்து 2017 முதல் 622 பேர் பலியாகி யுள்ளனர். 539 குடும்பங்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 25 குடும் பங்களுக்குப் பகுதி இழப்பீடுதான் வழங்கப்பட்டுள்ளது. 52 குடும்பங்க ளுக்கு இன்னும் இழப்பீடு ஏதும் வழங்க வில்லை. 6 வழக்குகள் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளன.  அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 86 பேர் உயிரிழந்துள்ளனர், மகாராஷ்டிராவில்- 82, தமிழ்நாட்டில்- 77, ஹரியானா- 76, குஜராத்- 73, தில்லியில்  62 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 40% இளம் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை அசிம் பிரேம்ஜி பல்கலை. ஆய்வு அதிர்ச்சித் தகவல் இந்தியாவில் உள்ள இளம் பட்டதா ரிகளில் சுமார் 40 சதவீதத்தின ருக்கு வேலை கிடைக்கவில்லை என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘இந்திய வேலைவாய்ப்பு நிலை 2026’ (State of Working India 2026) என்ற ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் 15-25 வயதுடைய 40 சத விகித பட்டதாரிகளுக்கும் 25-29 வயது இளைஞர்களில் 20 சதவிகித பட்டதாரிக ளுக்கும் இன்னும் வேலை கிடைக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர வேலை கிடைப்பதில்லை வேலை கிடைத்தாலும், அது நிரந்தர மானதாக இருப்பதில்லை.  ஒரு வரு டத்தில் வேலை தேடும் இளம் பட்டதாரி ஆண்களில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே ஏதாவது ஒரு வேலை கிடைக்கி றது. அவர்களிலும் சுமார் 44 சதவிகி தமானவர்களுக்கு நிரந்தரமற்ற தற்கா லிக வேலை மட்டுமே கிடைக்கிறது.  வெறும் 7% பேருக்கு மட்டுமே நிலையான மாதச் சம்பளத்துடன் கூடிய நிரந்தர வேலை (Permanent Salaried Employ ment) கிடைப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது