தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே.04ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
