கவனச் சிதைவு - கோவி.பால.முருகு
அழகேசனின் அப்பா அந்த காலத்தில் பிரபலமான ஒரு ஆசிரியர் சங்கத்தின் வட்டாரத் தலைவராக தொடர்ந்து இருபது ஆண்டுகள் இருந்தவர். அந்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு அறிமுகமானவர்.அவரைவிட வயதில் மூத்தவர்கள் கோபா என்றும்,இளையவர்கள் அண்ணாச்சி என்றும் அழைப்பார்கள்.
மாலை நேரத்தில் கோபா வீட்டில் ஏரா ளமான ஆசிரியர்கள் கூடிவிடுவார்கள். அரசியல், சங்கம், கலை, இலக்கியம் என்று அவர்களுடைய விவாதம் தொடரும்.கோபாவின் மனைவி நாள்தோறும் சலிக்காமல் வந்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டீ, காபி போட்டுக் கொடுப்பதும், சில நாள்களில் போண்டா, பஜ்ஜி என்று சிற்றுண்டி செய்து தரு வதும் உண்டு. கோபாவின் மனைவியை எல்லா ஆசிரியர்களும் அண்ணி அண்ணி என்று வாய் நிறைய அன்போடு அழைப்பார்கள். இருசக்கர மோட்டார் வாகனம் என்பது மிகமிகக் குறைவாக இருந்த காலம்.ஒரு ஆசிரியர் மிதிவண்டி வாங்குவதென்பது இப்போது கார் வாங்குவதைப் போலத் தான் சிரமமானது. பெரும்பகுதி ஆசிரி யர்கள் மிதிவண்டியைத்தான் பயன் படுத்தி வந்தார்கள்.அதனால் கோபா வீட்டின் முன்னே குறைந்தது பத்து மிதிவண்டி யாவது நிற்கும். அப்படி நிற்பது அழகேசனுக்கு வசதி யாகப் போயிற்று.நிற்கும் மிதிவண்டியி லேயே புதிதாகப் பார்த்து எடுத்துக் கொண்டு தள்ளிக் கொண்டே செல்வான்.தள்ளும் போது கூட மிதிவண்டி சாய்ந்து அதன் மேல் இவன் விழுந்து கிடப்பான்.இப்படியே பல நாள்கள் தள்ளித் தள்ளிப் பழகியவன் குரங்குபெடல் போடுமள விற்கு முன்னேறி விட்டான். குரங்கு பெடல் போட ஆரம்பித்த சில தினங்களிலேயே பாரில் காலைத் தூக்கிப் போட்டு மிதிக்கத் தொடங்கிவிட்டான்.அவ னுக்கு யாரும் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கவில்லை தானாக முயன்று கற்றுக் கொண்டான்.இருக்கையில் உட் கார்ந்து ஓட்டுமளவிற்கு அவன் வளர வில்லை. இருந்தாலும் தானே கற்று மிதி வண்டி ஓட்டுவதில் அவனுக்குத் தலை கால் புரியாத மகிழ்ச்சி.இப்போது கையை விட்டு விட்டு ஓட்டக் கூடக் கற்றுக் கொண்டான். ஒரு நாள் மாலை நேரம் முன்பு போலவே இவனிடம் மிகுந்த அன்பு காட்டும் ஆசிரியர் நெப்புக்கோயில் வைத்தியலிங்கத்தின் புதிய மிதிவண்டி யை எடுத்துக் கொண்டு ஓட்ட ஆரம்பித் தான். அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றி யது. இப்போதுதான் நன்றாக ஓட்டு கிறோமே, அதனால் கடைத்தெருவிற்கு போய்வரலாம் என்று நினத்தவுடனேயே கடைத்தெருவை நோக்கி மிதிவண்டியை ஓட்ட ஆரம்பித்தான். இப்போது கார்,பஸ்,லாரி என போய்க் கொண்டிருக்கும் முக்கிய சாலைக்கு வந்துவிட்டான். மிகவும் எச்சரிக்கையாக ஓட்டினாலும் வேகமாக ஓட்டிச் செல்வதை விடவில்லை. கடைத்தெருவே தன்னை கவனிப்பது போன்ற பெருமை மனதில் குடிகொண்டது. நண்பர்கள் சிலரைப் பார்த்து வணக்கமும் வைத்தான். இப்போது கடைத்தெருவைத் தாண்டி கூட்டம் குறைவாக உள்ள பகுதிக்கு வந்து விட்டான். திடீரென்று டக் டக் என்று மிதிக்கும் போது சத்தம் வந்தது.எதனால் சத்தம் வரு கிறது என்று குனிந்து பார்த்தான். வண்டி யின் மட்கார்டில் பெடல் இடிப்பதால் தான் சத்தம் வருகிறது என்று கண்டு பிடித்துவிட்டான். வேகத்தைக் குறைக்க வில்லை. மிதிவண்டியில் இருந்தவாறே குனிந்து மட்கார்டை ஒரு பக்கம் இடிக்காத வாறு அழுத்திவிட்டான். சரியாகிவிட்டது. நிமிர்ந்தவன் திடுக்கிட்டுப் போனான். கம்பி ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் கண்ணுக்கு எதிரே, மிதிவண்டி வேகமாக வேறு செல்கிறது.அதே வேகத்தில் வண்டியின் பின்னே மோதினால் கம்பி குத்தி உடலைக் கிழித்துவிடும். ஏன்… கம்பியே உடம்பின் ஆழத்தில் ஏறி உயி ருக்கே ஆபத்தாய் முடியலாம். ஒரு கண நேரத்தில் அவனுடைய மூளை வேலை செய்தது. இரண்டு கையையும் மிதிவண்டி யின் கைப்பிடியில் இருந்து எடுத்தவன் கையை கம்பி உடம்பில் குத்தாதவாறு எதிரே வைத்து கம்பியைத் தடுத்தான்.மிதி வண்டி சாய்ந்து கீழே விழுந்தது.இவனும் கீழே விழுந்தான். கம்பியைக் கையால் தடுத்ததால் இரண்டு உள்ளங்கைகளிலும் கம்பி ஆழமாகக் குத்தி இரத்தம் வழிந் தது. அழகேசனுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.அப்போது இதைப் பார்த்த ஒருவர் ஓடோடி வந்து பார்த்தார். கைகள் இரண்டிலும் இரத்தம் கொட்டி யது.இவனைப் பார்த்த உடனே அடை யாளம் கண்டுபிடித்து விட்டார். ”நீ…கோபா சார் பையந்தான?என்று கேட்டவர். வண்டியின் பின்னே அவனை அமர வைத்துக் கொண்டு அழகேசன் வீட்டிற்கு வந்தார். உள்ளே போன அழகேசனின் கை களில் இரத்தம் வழிவதைப் பார்த்து அவன் அம்மா பதறிவிட்டார். அழைத்து வந்தவர் தான் பார்த்ததை அப்படியே சொன்னார்.ஆசிரியர்கள் எல் லோரும் இருந்ததால் அப்பாவின் உதை யில் இருந்து தப்பித்துக் கொண்டான்.பக்கத்தில் இருக்கும் பந்தநல்லூருக்கு வந்து மார்க்கண்டன் டாக்டரிடம் காட்டி னார். அவர் கட்டுப்போட்டு விட்டு ஒரு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை அவரே தந்தார்.போகும்போதும் வரும்போதும் அழகேசனின் அப்பா கொடுத்த வசவுக்கும் அறிவுரைக்கும் அளவே இல்லை. இப்போதெல்லாம் மிதிவண்டியை எடுப்பதில்லை.மீண்டும் சில மாதங்க ளில் பழையதை அப்பாவும் அழகேச னும் மறந்து போனார்கள்.ஆனால் இப்போதெல்லாம் மிகுந்த எச்சரிக்கை யோடு மிதிவண்டியை ஓட்டுகிறான்.