நீலகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது அறிவியல் ஆசிரியர் செந்தில் குமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பொண்கவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அடுத்தடுத்து 20 மாணவிகள் ஆசிரியர் மீது புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து அறிவியல் ஆசிரியர் செந்தில் குமார்(50) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றியதும். கடந்த ஜூன் மாதம் தான் இந்த அரசு பள்ளியில் சேர்ந்ததுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் பணிபுரிந்த மற்ற பள்ளிகளிலும் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.