வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 3- தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நிர்வாகிகளை அவமானப்படுத் தும் வகையில் நடந்து கொண்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை நிர்வாகம் மற்றும் காவல்துறை யைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இளநிலைப் பயிற்சி அலுவலர் கள், உதவி பயிற்சி அலுவலர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க வேண் டும். கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு, இட மாறுதல் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் 5 ஆம் கட்டமாக புதனன்று நடை பெற்ற போராட்டத்தில் சங்க நிர் வாகிகளை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துறை நிர்வாகத்தை கண்டித்தும், தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் திருநாவுக்கரசு மீது தாக்குதல் நடத்தியதைக் கண் டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் எஸ். சக்தி தலைமை வகித்தார். ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், சத்துணவு ஓய்வுபெற்றோர் சங்க காவேரி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தருமபுரி மருத்துவக் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் சிவ மணி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை பேசினார். இதேபோல், நல்லம் பள்ளியில் வட்டச் செயலாளர் பெ.மகேஸ்வரி, கடத்தூரில் சுரேஷ், அரூரில் ரமேஷ், பாலக்கோட்டில் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இதில் சுகாதாரத்துறை சங்க நிர்வாகி ஆனந்தன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், பொருளாளர் அன்பழகன், இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலை வர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை பொறுப்பாளர் கோமதி தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் மார்கண்டன் தலைமை ஏற்றார். வருவாய்துறை அலுவலர் சங்க செயலாளர் பரமசிவம், உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் வைரமுத்து, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எலிசபெத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அம்சராஜ், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு ஐடிஐயில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வட்டக்கிளை பொருளா ளர் பாலமுருகன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதேபோல் கோபி உள்ளிட்ட அனைத்து வட்டங் களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ச.ஜெகநாதன், வட்டக் கிளை தலைவர் ஆர்.இராமசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதேபோன்று, அன்னூர், கோவை தெற்கு, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.