கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
சேலம், ஜூலை 3- மேச்சேரி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கழிப் பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் மனு அளித்த னர். சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மருத்துவமனையில் புதி யதாக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்பட்ட நாள் முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வில்லை. இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலரி டம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.மணி முத்து, கவுன்சிலர் ஆர்.பழனி ஆகியோர் மனு அளித்தனர். அதில், நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப் பட்ட கழிப்பிடத்தை இதுவரை திறக்காமல் இருப்பது சரி யில்லை. உடனடியாக கழிப்பிடத்தை திறக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக் கப்பட்டுள்ளது.