போர் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, 20 நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரானி ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இரு நாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடினர். பயணிகள் விமானம் உள்பட அனைத்து வகையான விமான சேவைகளையும் நிறுத்தி வைத்தன.
12 நாள்கள் நடைபெற்ற இந்தப் போரானது நிறுத்தப்படுவதாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமெரிக்க ஜனாபதி டிரம்ப் அறிவித்தார். இதனை, இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் மூலம் தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக 20 நாட்களுக்கு பிறகு பன்னாட்டு நகரங்களுக்கு ஈரான் விமான சேவைகளை துவங்கியுள்ளது.