மேற்கு வங்கத்தில் திரிணாமுலுக்கு எதிராக கட்சியினர் போராட்டம் 79 தொகுதிகளில் கடும் அதிருப்தி
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்ட மாக (ஏப்., 23, ஏப்., 29) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டி யலை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதாவது மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில் 74 சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டுள்ளது. அதே போல 15 சட்ட மன்ற உறுப்பினர்கள் வேறு தொகுதி களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் சொந்த கட்சிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். டயரை கொளுத்தி போராட்டம் 3 முறை எம்எல்ஏவாக இருந்த ரபிகுர் ரஹ்மான் (அம்டாங்கா தொகுதி) தனக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்டதால், ஆதரவாளர்களுடன் அம்டாங்கா பகுதி சாலைகளில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டார். அதே போல கானிங் பர்பா தொகுதியில் சவுகத் மொல்லா விற்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தால், அவரது ஆதரவாளர்கள் போ ராட்டம் நடத்தினர். 3 முறை எம்எல்ஏ வாக (சின்சுரா தொகுதி) இருந்த அசித் மஜும்தார், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவோ அல்லது கட்சியை விட்டு வெளியேறப் போவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். சின்சுரா தொகுதியில் அசித் மஜும்தாருக்குப் பதில் இளைஞர் அணித் தலைவர் தேபாங்சு பட்டாச்சார்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 4 முறை வெற்றி பெற்ற ராஜ்கஞ்ச் எம்எல்ஏ ககேஷ்வர் ராய், திரிணாமுல் காங்கிரஸ் மேலிடம் பணத்திற்காகவே எனக்கு சீட் மறுக்கப் பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
