states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நிலவும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ‘கார்ப்பரேட் ஜனநாயகம்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு அறக்கட்டளைகள் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜகவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. கார்ப்பரேட்டுகள் அதிகப் பணம் கொடுத்தால், மோடி அரசு அவர்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கும் சூழல் உள்ளது.

நாகா மாணவர் முன்னணி வலைத்தளம்

குஜராத் மாநிலம் காந்திநகரில் ஏஐ-ஐப் பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்புக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்த சாமியார் பிரதீப் ஜோடாங்கியா, அவரது சீடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தி நகர் அமித் ஷாவின் தொகுதி. இதுதான் மோடியின் உண்மையான குஜராத் மாடல்.

இந்தியா அன்பில்டர்டு சமூக ஊடகம்

பிரதமர் மோடியை மிமிக்ரி செய்து வெளியிடப்பட்ட  வீடியோவை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. முன்பு அந்த வீடியோ சாதாரண அளவில் தான் வைரலாகி இருந்தது. ஆனால் வீடியோவை நீக்க உத்தரவிட்ட பின்பு தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இது தேவையா?

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

இன்று நமது நாணயம் (ரூபாய்) மரணப் படுக்கையில் உள்ளது. அது இறுதிக்கட்டத்தில் இருப்பதால், அதற்கு உடனடியாக ஒரு மருத்துவரின் கவனிப்பு தேவைப்படுகிறது. பிரதமர் ‘மௌனமாக’ இருக்கிறார்; பிரதமரைப் போலவே ரூபாயும் தனது குரலை இழந்துவிட்டது.