குஜராத் மாநிலத்தில் பள்ளிக் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், கல்வி துறையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு, பாஜக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், மாநிலத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த பதிலில்,
- மொத்தம் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறை
- மாணவர் சேர்க்கை இல்லாததால் 75 அரசு பள்ளிகள் மூடப்பட்டமை
- 2,674 பள்ளிகள் ‘ஷிப்ட்’ முறையில் இயங்கும் நிலை
- என முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 32 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் 8,586 வகுப்பறைகள் குறைவாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 856 வகுப்பறைகள் பற்றாக்குறையாகவும் உள்ளதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அகமதாபாத் போன்ற நகரப் பகுதிகளிலும் இந்த பிரச்சினை இருப்பது, இது கிராமப்புறங்களுக்கான பிரச்சினை அல்ல என்பதை காட்டுகிறது.
அரசு தொடர்ந்து கட்டுமானம் மற்றும் திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தாலும், சட்டமன்றத்தில் வெளியான தரவுகள், இந்த நெருக்கடியின் பரப்பளவும் சிக்கலும் அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகின்றன. தற்போதைய நடவடிக்கைகள் இந்த பிரச்சினையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்பது தெரியவருகிறது. குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதும் 2001 - 2014 வரை அவர் முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
