world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பிலிருந்து அர்ஜெண்டினா விலகல்

 உலக சுகாதார அமைப்பிலிருந்து அர்ஜெண்டினா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியேறி விட்டது. இதனை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாப்லோ கிர்னோ தெரிவித்துள்ளார். 2025 மார்ச் 17, அன்று ஐ.நா பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் மூலம் இந்த முடிவு முறைப்படி அறிவிக்கப்பட்டதாக அவர்  குறிப்பிட்டுள்ளார். தீவிர வலதுசாரியும் டிரம்ப் ஆதரவாளருமான அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே தனது மோசமான கொள்கைகளால் நாட்டை படுகுழியில் தள்ளி வருகிறார். அவரது தற்போதைய முடிவு மிக மோசமானது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

2024 இல் தடுக்க வாய்ப்பிருந்தும் 49 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

2024 ஆம் ஆண்டு 5 வயதிற்குட்பட்ட சுமார் 49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அவை தெரிவித்துள்ளது.  முறையான மருத்துவ வசதி, முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான குறைந்த செலவிலான மருத்துவ உதவிகள் செய்திருந்தால் அந்த மரணங்களில் பெரும்பாலானவற்றைத் தடுத்திருக்க முடியும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 க்கு பிறகு தடுக்க வாய்ப்பிருந்தும் பலியாகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதூறு பிரச்சாரத்தை நிறுத்து : அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என அமெரிக்கா பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு தைவான் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரி வித்துள்ளது. இதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தைவான் விவகாரத்தில் அமெ ரிக்கா எச்சரிக்கையுடன் பேசவும் செயல்படவும் வேண்டும். சீனா அச்சுறுத்தலை உருவாக்கும் நாடு என அமெரிக்கா செய்து வரும் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.  மேலும் சீனா பற்றிய தவறான புரிதலைத் திருத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு : சர்வதேச சூழல் குறித்து ஆலோசனை  

பெல்ஜியத்தில்  துவங்கியுள்ள  ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஈரான் மீதான  போர், எரிசக்தி விலை உயர்வு,  உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் கடன் உதவி குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பா, பொருளாதார நெருக்கடி மற்றும் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த ஒரு தீர்வுப் பெட்டகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளின்  திட்டத்திற்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓப்ரான் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

டிரம்ப்பை விமர்சித்தவர் மீது துரோகிப் பட்டம்

 அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரி ஜோசப்  கென்ட்  ரகசியத் தகவல்களை கசிய விட்டாரா என   எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் இஸ்ரேலின் லாபியால் தான் நடைபெறுகிறது. ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி  ஆபத்து இல்லை என போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் அவர் ராஜினாமா அறிவிப்பதற்கு முன்னாலேயே அவர் அரசு தகவல்களை கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

போருக்கு இடையே சீனா செல்லும் ஈரான் கச்சா எண்ணெய்

பெய்ஜிங், மார்ச் 19- ஈரானுக்கு சீனா உதவி செய்கிறதா இல்லையா என பெரும் விவாதம் நடந்து வரும் நிலையில் சீனா சட்டப்பூர்வ வகையில் ஈரா னின் பொருளாதாரத்திற்கு உதவி வருவது தெரிய வந்துள்ளது. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் கோபத்தை  நேரடியா கத் தூண்டி பகைத்துக் கொள்ளாமல் ஈரானின் பொருளாதார மற்றும் ராணுவ முதுகெலும்பாக சீனா எவ்வாறு செயல்படுகிறது என தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் துவங்கிய பிறகு மார்ச் முதல் வாரத்திலிருந்து உலகளாவிய எண்ணெய் விநி யோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கப்பல்கள், அந்நாடுக ளுக்கு உதவி செய்யும் நாடுகளின் கப்பல்கள் அவ்வழியாக செல்ல ஈரான் அனுமதி மறுத்துள்ளது. எனினும் அப்பாதை வழி யாக ஈரானிடம் அனுமதி பெற்றும் தெரியாமலும் இது வரை  90  கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாகவும் சில செய்திகள் வெளியா கியுள்ளன. இதில் 16 எண்ணெய் டேங்கர்கள், பல கப்பல்கள் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க தங்களது இருப்பிடத்தைக் காட்டும் சமிக்ஞைகளை அணைத்துவிட்டு (Dark Transits) ரகசியமாகப் பயணம் செய்கின்றன. இந்தியாவின் ‘சிவாலிக்’ ‘நந்தா தேவி’ ஆகிய கேஸ் ஏற்றி வந்த  கப்பல்கள், பாகிஸ்தானின் ‘கராச்சி’ என்ற கச்சா எண்ணெய் டேங்கரும் இந்தப் பாதையை கடந்துள்ளன. குறிப்பாக இப் பாதை வழியாக தங்கு தடையின்றி ஈரானின் கச்சா எண்ணெய் யை சீனா பெற்று வருவதாகவும் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் தற்போது வரை 1.17 கோடி பேரல் கச்சா எண்ணெய் யை ஈரான் சீனாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.  இச்சூழலில் வெளியான தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டு ரையில் அமெரிக்காவின் சட்டவிரோதத் தடைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், ஈரானின் கச்சா எண்ணெய்யை 80%  முதல் 90% வரை சீனா வாங்குகிறது. இதன் மூலம் ஈரான்  அர சுக்குத் தேவையான அந்நியச் செலாவணி மற்றும் நிலையான வருவாயைச் சீனா உறுதி செய்கிறது. சர்வதேசத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான் நிறுவனங்களுக்கு, சீனா தனது வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளைத் தடையின்றி மேற்கொள்ள உதவுகிறது. ஈரான் தயாரிக்கும் ‘ஷாஹெட்’ (Shahed) டிரோன்களுக்கான தேவையான மோட்டார்கள், ஏவுகணை எரிபொருளுக்கான வேதிப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுக்கான மின்னணு பாகங்களைச் சீனா வழங்கி வருகிறது. தனது செய ற்கைக்கோள் சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக, மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க, சீனா தனது சொந்த ஜிபிஎஸ் அமைப்பான பெய்டோ தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்குவதாக சந்தேகம் உள்ளது என கூறப்படுகிறது. சீனா 1979-க்குப் பிறகு எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. அதன் வெளி யுறவுக் கொள்கை மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலை யிடாத ஒன்றாகவே உள்ளது. மேலும், சீனா நேரடியாக ராணுவ ரீதியாகத் தலையிட்டால் அது அதன் உள்நாட்டு பொருளாதா ரத்தை பாதிக்கும் என்பதால், அமெரிக்கா போல போர் உள்ளிட்ட வற்றில் பணத்தை விரையம் செய்யாமல்  தனது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நிதானத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.