business

img

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய நயாரா!

நாடு முழுவதும் உள்ள நையரா பங்க்-களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5.30 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் போர் காரணமாக, உலகளாவிய எரிபெருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 119 அமெரிக்க டாலராக (ரூ.11,198.13) உயர்ந்துள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) மற்றும் இந்தியன் ஆயில் (IOCL) உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், மார்ச் 20 அன்று ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோலின் விலையை சுமார் ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்தின.
இதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களை அமைத்துள்ள நயாரா தனியார் நிறுவனத்தின் பெட்ரோல் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5.30 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நையரா பங்க்-களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93க்கும், டீசல் ரூ.97.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.