india

img

ஒன்றிய அரசை கண்டித்து திருநர் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல்!

திருநர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து, திருநர்களுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
திருநர் திருத்த சட்ட மசோதா 2026 நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த மசோதாவில் திருநர்களின்  திருநர்களின் சுயநிர்ணயத்தை நிரூபிக்க அதிகாரிகளின் சான்றிதழ் அவசியம் உள்ளிட்ட, அவர்களுக்கு எதிரான விதிகள் அடங்கியுள்ளன.
கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படட்து. கவுன்சில் உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல் திருநர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியதாகக் குற்றம்சாட்டி திருநர்களுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
கல்கி சுப்பிரமணியம் மற்றும் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் ராஜினாமா செய்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.