states

img

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவரின் மகன் கைது!

தென் கோவாவில் பாஜக கவுன்சிலரின் மகன் சோஹம் நாயக் (20) சிறார் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவா மாநிலம் குர்சோரெம் பகுதியில் பாஜக கவுன்சிலர் சுஷாந்த் நாயக்கின் மகன் சோஹம் சுஷாந்த் நாயக் (20), 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், வன்கொடுமை சம்பவங்களை வீடியோ எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல், சில வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு வழக்கில், 2023 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஒரு சிறுமியுடன் நட்பு வளர்த்துக் கொண்டு, தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று இரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில், 2024–25 காலத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு சிறுமியை தொடர்புகொண்டு, அசிங்கமான புகைப்படத்தை அனுப்பி மிரட்டி, நேரில் சந்திக்கவும், பிற பெண்களின் தொடர்பு விவரங்களையும் வழங்குமாறு அழுத்தம் கொடுத்ததுள்ளர்.
இந்த வழக்கில் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் கடையடைப்பில் ஈடுபடுவதாக எச்சரித்தனர். இதையடுத்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போது 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தென் கோவா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் தேசாய், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மொபைலில் பெண்களின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சோஹம் சுஷாந்த் நாயக் (20) மீது ஒழுக்கக்கேடு தொடர்பான பிரிவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO) மற்றும் கோவா குழந்தைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.