ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தில் இன்று அதிகாலை டிப்பர் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து ஹரிகிருஷ்ணா ட்ராவல்ஸ் நிறுவனத்தின் சொகுசு பேருந்து ஒன்று 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாமூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் அருகே டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் பி.ராஜா பாபு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
